SSC கழகத்தின் பிரதான அனுசரணையாளராகும் அக்பர் பிரதர்ஸ்

149

இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான 1899ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சின்ஹலீஸ் விளையாட்டுக் கழகத்தின் (SSC) பிரதான அனுசரணையாளராக அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. 

இதன்படி, 2021 முதல் 2023 வரையான மூன்று வருடங்களுக்கு SSC கழகத்தின் சகலவிதமான கிரிக்கெட் போட்டிகள் (முதல் தர மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்) மற்றும் அந்தக் கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கை கிரிக்கெட்டை மீளக் கட்டியெழுப்ப ஏழு திட்டங்கள் அறிவிப்பு

இந்த நிலையில், கடந்த வாரம் அனுசரணைக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் வைபவம் SSC கழகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு அக்கழகத்தின் தலைவர் டபிள்யூ. ரீ. எல்லாவெல கருத்து தெரிவிக்கையில்,  

“பிரபல தேயிலை நிறுவனமான அக்பர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைவதையிட்டு பெருமை அடைகின்றோம். மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் எமக்கு உதவ வந்ததுள்ளது. இதன்மூலம் எமது கிரிக்கெட் விளையாட்டை மேலும் அபிவிருத்தி செய்து உயர்ந்த நிலையை அடையக்கூடியதாக இருக்கும்” என அவர் தெரிவித்தார். 

இதனிடையே, SSC கழகத்தின் பிரதான அனுசரணையாளராக செயற்பட கிடைத்தமை தொடர்பில் அக்பர் பிரதர்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹுஸைன் அக்பர் அலி கருத்து வெளியிடுகையில்

“இலங்கையில் முதன்மையான கிரிக்கெட் கழகமான SSC கழகத்துடன் கைகோர்ப்பதை பாக்கியமாக கருதுகின்றோம். SSC கழகத்தில் உள்ள இளம், திறமையான கிரிக்கெட் வீரர்களை அதி உயரிய நிலைக்கு கொண்டு செல்வதற்கு பூரண பங்கிப்பினை வழங்குவோம்” என அவர் தெரிவித்தார்.

சர்வதேச மட்டத்தில் வெற்றி பெறும் மெய்வல்லுனர்களுக்கு மில்லியன் தொகை பரிசு

இதேவேளை, SSC கழகத்தின் கிரிக்கெட் குழுத் தலைவரும், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான மஹேல ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில்

“அக்பர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். SSC கழகத்தின் கிரிக்கெட் உட்கட்டமைப்பை நவீனமயமாக்கி மேம்படுத்துவதால் வீரர்களது கிரிக்கெட் ஆற்றல்களை, திறன்களை வளர்ப்பதற்கு இந்தப் பயணம் நீண்ட காலம் தொடரும்” என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, கடந்த வாரம் நடைபெற்ற அனுசரணைக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் வைபவத்தில் அக்பர் பிரதர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தையீப் அக்பர் அலி, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சஞ்சீவ ஜயவர்தன, SSC அணித் தலைவர் தசுன் ஷானக்க, உதவித் தலைவர் தனஷ; குணதிலக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<