சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு மற்றொரு வெற்றி வாய்ப்பு

195

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் இரண்டு போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் புதன்கிழமை (02) நடைபெற்றது.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

பதுரெலிய விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமாக துடுப்பெடுத்தாடி வரும் சிலாபம் மேரியன்ஸ் அணி 372 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

சச்சித்ர சேரசிங்கவின் சதத்தால் சிலாபம் மேரியன்ஸ் ஆதிக்கம்

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் ………….

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பதுரெலிய விளையாட்டுக் கழகம் 162 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்போது சிலாபம் மேரியன்ஸ் அணித்தலைவர் மலிந்த புஷ்பகுமார 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

சிலாபம் மேரியன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 209 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் எதிரணியை பலோ ஓன் (follow on) செய்ய அழைக்க முடிந்தபோதும் அந்த அணி தனது இரண்டாவது இன்னிங்சுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

இதன்படி சிலாபம் மேரியன்ஸ் அணியின் ஆரம்ப வீரர் கசுன் விதுர சிறப்பாக ஆடி 78 ஓட்டங்களை பெற்றபோதும் அவசரப்பட்டு ரன் அவுட் ஆனார். இதன்போது அவர் ஓஷத பெர்னாண்டோவுடன் சேர்ந்து 2ஆவது விக்கெட்டுக்கு 101 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டார். ஓஷத பெர்னாண்டோ 56 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது சிலாபம் மேரியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 163 ஓட்டங்களை பெற்றிருப்பதன் மூலம் மற்றொரு வெற்றி வாய்ப்பை நெருங்கியுள்ளது. பிரீமியர் லீக் தொடரின் B குழுவில் சிலாபம் மேரியன்ஸ் இரண்டு வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 371 (85.2) – சச்சித்ர சேரசிங்க 103, புலின தரங்க 70, இசுரு உதான 41, மலின்த புஷ்பகுமார 31, கசுன் விதுர 23, அலங்கார அசலங்க 5/74, டிலேஷ் குணரத்ன 3/91, துவின்து திலகரத்ன 2/80

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 162 (47.3) – பதும் நிஸ்ஸங்க 42, சன்ஜய சதுரங்க 39, நதீர நாவெல 22, மலிந்த புஷ்பகுமார 5/40

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 163/2 (36) – கசுன் விதுர 78, ஓஷத பெர்னாண்டோ 56*

இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட்டில் பிரகாசிக்கும் வெளிநாட்டவர்கள்

இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது நடாத்தி வரும் உள்ளூர் முதல்தர கழகங்களுக்கு……


SSC எதிர் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு கோல்ட்ஸ் அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் பின்தங்கிய SSC அணி இரண்டாவது இன்னிங்ஸில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. எனினும் கோல்ட்ஸ் கழகம் இரண்டாது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எஞ்சியிருக்க 147 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

கொழும்பு, கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் கோல்ட்ஸ் அணி முதல் இன்னிங்சுக்கு 267 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தபோதும் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த SSC அணி எதிர்பாராது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்று முன்னணியில் இருக்கும் ஆரம்ப வீரர் திமுத் கருணாரத்ன 8 ஓட்டங்களுடனேயே ஆட்டமிழந்தார்.

பின் வரிசையில் வந்த சாமர கபுகெதர 61 ஓட்டங்களை பெற்று கௌரவத்தை காத்தார். இதன்மூலம் SSC அணி முதல் இன்னிங்சுக்கு 200 ஓட்டங்களைப் பெற்றது. கோல்ட்ஸ் அணியின் சுழல் வீரர்களான பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுகளையும் அணித் தலைவர் டில்ருவன் பெரேரா 3 விக்கெட்டுகளையும் விழ்த்தினர்.

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு கோல்ட்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது அந்த அணி 80 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 268 (82.3) – சங்கீத் குரே 53, டில்ருவன் பெரேரா 45, கவிஷ்க அஞ்சுல 37*, பிரியமால் பெரேரா 32, அவிஷ்க பெர்னாண்டோ 32, விஷாத் ரன்திக்க 21, நிசல தாரக்க 20, ஆகாஷ் செனரத் 4/76, சச்சித்ர சேனநாயக்க 3/70, கசுன் மதுசங்க 2/53

SSC  (முதல் இன்னிங்ஸ்) – 200 (59.1) – சாமர கபுகெதர 61, கௌஷால் சில்வா 43, ஆகாஷ் செனரத்ன 28, சச்சித்ர சேனநாயக்க 27, பிரபாத் ஜயசூரிய 4/63, டில்ருவன் பெரேரா 3/55, கவீஷ்க அஞ்சுல 2/31

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 80/5 (35) – சங்கீத் குரே 23, பிரியமால் பெரேரா 22*, அக்தப் காதர் 2/13, சச்சித்ர சேனநாயக்க 2/22

நாளைய போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி நாளாகும்