மலேசியாவில் நடைபெறவுள்ள 19 வயதின் கீழ் அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை 19 வயதின் கீழ் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தின் தலைவியாக மனுதி நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவியாக ரஷ்மிகா செவ்வந்தி உப தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
>>நான்காவது T20 போட்டியில் வெற்றியீட்டி தொடரை சமப்படுத்திய பங்களாதேஷ்<<
இவர்களுடன் இறுதியாக நடைபெற்ற பங்களாதேஷ் 19 வயதின் கீழ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய பல வீராங்கனைகளுக்கு T20 உலகக்கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பு பெறப்பட்டுள்ளது.
துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பை வெளிப்படுத்தியிருந்த தஹமி சனுத்மா, ஹிருனி ஹன்சிகா, சஷினி கிம்ஹானி போன்ற வீராங்கனைகளுடன் சமோதி பிரபோதா, லிமன்சா திலகரட்ன மற்றும் அஷேனி தலகுனே போன்ற பந்துவீச்சில் பிரகாசித்த வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.
T20 உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை 19 வயதின் கீழ் குழாம் நாளைய தினம் (11) மலேசியாவுக்கு புறப்படவுடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
மனுதி நாணயக்கார (தலைவி), ரஷ்மிகா செவ்வந்தி (உப தலைவி), விமோக்ஷா பாலசூரிய, ஹிருனி ஹன்சிகா, சுமுது நிசன்சலா, தஹமி சனுத்மா, ரஷ்மி நேத்ராஞ்சலி, சஷினி கிம்ஹானி, அசேனி தலகுனே, பிரமுதி மெத்சரா, சமோதி பிரபோதா, சஞ்சனா காவிந்தி, தனுலி தென்னகோன், லிமன்சா திலகரட்ன, செஹாரா இந்துவரி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<