ஐசிசி டி-20 தரவரிசை: இலங்கை வீரர் லக்ஷான் சந்தகென் முன்னேற்றம்

586
 

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இன்று வெளியிட்ட ஒருநாள் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்க, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா, 4ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இதனிடையே, ஐசிசி இன் டி-20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர் லக்ஷான் சந்தகென் முதல் இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நிறைவடைந்த நியூசிலாந்து, பங்களாதேஷ், இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களின் முடிவில் ஐசிசி இன் வீரர்களுக்கான தரவரிசையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஒரே போட்டியில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி

இதில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய விராத் கோலி, 870 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் ஆஸம் (837) இரண்டாவது இடத்திலும், ரோஹித் சர்மா (825) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடங்களில் எந்தவொரு இலங்கை வீரர்களும் இல்லை

இதனிடையே, பந்துவீச்சாளருக்கான தரவரிசையில், முதல் இரண்டு இடங்களில் நியூசிலாந்தின் ட்ரென்ட் போல்ட் (737) மற்றும் ஆப்கானிஸ்தாளின் முஜிப் உர் ரஹ்மான் (708) ஆகியோர் தொடருகின்றனர்

இதில் பங்களாதேஷத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்திய நியூசிலாந்து வீரர் மாட் ஹென்றி (691) 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்

இதனிடையே, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடாத ஜஸ்பிரித் பும்ரா 3ஆவது இடத்தில் இருந்து 4ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் மெஹதி ஹசன் 668 புள்ளிகளுடன் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதேநேரம், இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 42 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய புவனேஷ்வர் குமார் 9 இடங்கள் ஏற்றம் கண்டு 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணையும் ஜேசன் ரோய்

இதில் புவனேஷ்வர் குமார், 4 ஆண்டுகளுக்குப் பின் ஐசிசி தரவரிசையில் சிறந்த இடத்தைப் பிடித்தார். இவர் இறுதியாக 2017 செப்டம்பரில் வெளியான தரவரிசையில் 10ஆவது இடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதே போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷர்துல் தாக்குர் 13 இடங்கள் முன்னேறி 80ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்

ஒருநாள் போட்டிகளுக்கான சகலதுறை வீரர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 2ஆவது இடத்தில் நீடிக்கிறார். பங்களாதேஷின் சகிப் அல் ஹசன் (408) முதலிடத்திலும், ஆப்கானிஸ்தானின் மொஹமட் நபி (294) 3ஆவது இடத்திலும் இருக்கின்றனர்

IPL 2021 – அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் என்ன?

இதேவேளை, ஐசிசி இன் ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் மற்றும் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையின் முதல் 10 இடங்களுக்குள் எந்தவொரு இலங்கை வீரர்களும் இடம்பெறவில்லை

கே.எல் ராகுல் பின்னடைவு

ஐசிசி இன் டி-20 போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் விராத் கோஹ்லி, கே.எல் ராகுல் ஆகிய இருவரும் 5ஆவது, 6ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டனர். முதலிடத்தில் இங்கிலாந்தின் டாவிட் மலான் நீடிக்கிறார். அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ஞ்ச் 2ஆவது இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் 3ஆவது இடத்திலும் உள்ளனர்

இதனிடையே, ஐசிசி இன் டி-20 போட்டிக்கான பந்துவீச்சாளர்கள், சகலதுறை வீரர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் எந்தவொரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.

இதேவேளை, ஐசிசி இன் வீரர்களுக்கான புதிய தரவரிசையின் அடிப்படையில்  டி-20 போட்டிகளுக்கான வீரர்களில் இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர் லக்ஷான் சந்தகென், ஒரு இடம் முனனேறி 9ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…