IPL 2021 – அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் என்ன?

124
BCCI
 

கொவிட்-19 வைரஸ் அச்சத்திற்குப் பின்னர் 2020ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடர், கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் நடைபெற்றிருந்தது. 

குறித்த தொடர் நடைபெற்று கிட்டத்தட்ட 5 மாதங்களின் பின்னர், 2021ஆம் ஆண்டுக்கான IPL தொடர், அதாவது 14ஆவது பருவகாலத்திற்கான IPL தொடர் இம்மாதம் 09ஆம் திகதி விறுவிறுப்பிற்கு மத்தியில் ஆரம்பமாகின்றது.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் பார்வையாளர்கள் எவருமின்றி நடைபெற்றிருந்த, IPL தொடர் இந்த ஆண்டு தனது தாயகமான இந்திய மண்ணுக்கு மீண்டும் வந்திருக்கின்றது.  

டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைவராகும் ரிஷப் பண்ட்

எட்டு அணிகள் பங்குபெறும் இந்த ஆண்டுக்கான IPL தொடரில் மொத்தமாக 60 போட்டிகள் 6 வெவ்வேறு மைதானங்களில் நடைபெறவிருப்பதுடன் முதல் போட்டி கடந்த இரண்டு வருடங்களாக IPL தொடரின் சம்பியனாக இருக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கும் இடையில் எதிர்வரும் 09ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்றது. 

பத்து அணிகள் வதந்தி?? 

இந்த ஆண்டுக்கான IPL தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் எனக் கூறப்பட்ட போதும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) தமது 89ஆவது ஆண்டுக்கூட்டத்தில் இந்த ஆண்டுக்கான IPL தொடரில் புதிய அணிகளின் சேர்க்கை இருக்காது எனக் குறிப்பிட்டு 2022ஆம் ஆண்டுக்கான தொடரில் புதிய அணிகள் இரண்டு இணைக்கப்படும் என்பதனை உறுதி செய்திருக்கின்றது.  

யாருக்கு அதிஷ்டம்??

பொதுவாக அதிக பணம் கொழிக்கும் கிரிக்கெட் தொடரான IPL தொடரின் இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்றிருந்தது. 

இந்த ஏலத்தில் அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட வீரராக, கிறிஸ் மொர்ரிஸ் மாறியிருந்தார். பந்துவீச்சு சகலதுறைவீரரான கிறிஸ் மொர்ரிஸினை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினர் இந்திய நாணயப்படி  16.25 கோடி ரூபாய்களுக்கு கொள்வனவு செய்திருந்ததோடு, அது வரலாற்றில் IPL அணியொன்று வீரர் ஒருவருக்கு செலவு செய்த அதிக பணமாகவும் மாறியிருந்தது. 

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஐவரடங்கிய குழுவை நியமிக்க உத்தரவு

இதேநேரம், இந்திய அணியின் சார்பில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக கிறிஸ்னப்பா கௌதம் மாறினார். சகலதுறை வீரரான கிறிஸ்னப்பா கௌதம் சென்னை சுபர் கிங்ஸ் அணியினால் இந்திய நாணயப்படி 9.25 கோடி ரூபாய்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெயர் மாற்றத்துடன் அணி 

கடந்த 2018ஆம் ஆண்டில் டெல்லி டெர்டெவில்ஸ் அணி தமது பெயரினை டெல்லி கெபிடல்ஸ் என மாற்றியிருந்தது. இதனை அடுத்து, இந்தப் பருவகாலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தமது பெயரினை பஞ்சாப் கிங்ஸ் என மாற்றியிருக்கின்றது. இதுவரை IPL தொடரின் எந்தப் பருவகாலத்திலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறாத பஞ்சாப் அணி தமது பெயர் மாற்றத்தினையும், புதிய இலச்சினையினையும் கடந்த பெப்ரவரி மாதம் வெளியிட்டிருந்தது.  

பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யத் தயாராகும் முரளிதரன்

புதிய விதிமுறைகள் 

இந்த ஆண்டுக்கான IPL தொடரில் இருந்து போட்டி நடுவர்கள், தீர்ப்பு வழங்கும் போது உபயோகம் செய்யும் “Soft Signal” முறைமை நீக்கப்பட்டிருக்கின்றது. அதோடு, போட்டி ஒன்று நடைபெறும் போது அணியொன்றுக்கு 20 ஓவர்களையும் வீசுவதற்கான நேரம் 90 நிமிடங்களுக்குள் வரையறுக்கப்பட்டிருக்கின்றது.  

இவற்றோடு, DRS மேன்முறையீடுகளின் போது கவனிக்கப்படும் நடுவர்களின் “Umpire Call”, துடுப்பாட்டவீரர்கள் ஓட்டங்கள் எடுக்கும் போது மூன்றாம் நடுவரின் அவதானம் என பல்வேறு விடயங்களிலும் கவனம் செலுத்தப்படவிருக்கின்றன. 

இவ்வாறு பல புதிய விடயங்கள் உள்ளடங்கலாக நடைபெறவிருக்கும் இந்த ஆண்டுக்கான IPL தொடர் என்னவென்ன சுவாரசியங்களை வைத்திருக்கின்றது என்பதனை இம்மாதம் 09ஆம் திகதியில் இருந்து பார்ப்போம். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<