ஒரே போட்டியில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி

121

சொந்த மண்ணில் 10,000 ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்த முதல் வீரராகவும், இந்தியா சார்பாக அந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரராகவும் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அந்த அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.

இந்த நிலையில், புனேயில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரர்களான குருணல் பாண்டியா துடுப்பாட்டத்திலும், பிராசித் கிருஷ்ணா பந்துவீச்சிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தியதன் பலனாக இந்தியா 66 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ஓட்டங்களைக் குவித்தது.

>>T20I துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேறிய விராட் கோஹ்லி

இதில் இந்திய அணியின் தேவைக்கு ஏற்ப துடுப்பாடிய விராத் கோலி, அரைச் சதம் கடந்து 56 ஓட்டங்களை எடுத்து புதிய சாதனையொன்றை படைத்தார்.

சொந்த மண்ணில் அதிவேகமாக 10,000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். கோலி 195 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் அவுஸ்திரேலிய வீரர் ரிக்கி பொண்டிங் 219 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருந்தார். அத்துடன், சொந்த மண்ணில் 10,000 ஓட்டகளைக் கடந்த 2ஆவது இந்திய கிரிக்கெட் வீரராகவும் இடம்பிடித்தார்.

இந்தியாவின் நட்சத்திர ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் சொந்த மண்ணில்  14,192 ஓட்டங்களை எடுத்து இந்த தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். அதிலும் குறிப்பாக, 223 ஆவது போட்டியில் தான் சச்சின் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.

>>Video – Legends தொடரில் Dilshan & Co படைத்த சாதனைகள்..!|Sports RoundUp – Epi 154

இந்தப் பட்டியலில் இலங்கையின் மஹேல ஜயவர்தன (224) மற்றும் குமார் சங்கக்கார (229), தென்னாபிரிக்காவின் ஜக் கலிஸ் (236) ஆகியோரும் சொந்த மண்ணில் 10,000 ஓட்டங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராத் கோலி ஒரு சதம் அடித்தால் சச்சின் தெண்டுல்கரரின் சாதனையை சமன் செய்து ரிக்கி பொண்டிங்கின் சாதனையை முறியடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

>>இந்திய ஒருநாள் அணியில் சூர்யகுமார் யாதவ், குருணால், பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு

அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் சர்வதேச போட்டிகளில் தலைவர் பதவியில் 41 சதங்களை அடித்துள்ளார். விராட் கோலியும், சர்வதேசப் போட்டிகளில் தலைவர் பதவியில் 41 சதங்கள் அடித்து, ரிக்கி பொண்டிங்குடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார்.

மறுபுறத்தில் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் 20 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி இதுவரை சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியில் 19 சதங்கள் அடித்துள்ளார்.

எனவே, ஒற்றை சதத்தில் இரண்டு முக்கிய சாதனைகளை இந்த தொடரில் முறியடிப்பதற்கான வாய்ப்பு விராத் கோலிக்கு கிடைத்துள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க