வேண்டுமென்றே போட்டியின் முடிவை மாற்றினால் ஆஸி. அணிக்கு அபாரதம்

70
Marsh could face ban if Australia manipulate Scotland result

2024ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து இங்கிலாந்தினை வெளியேற்றும் வகையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி செயற்படுவது இனம் காணப்பட்டால் அதன் அணித்தலைவர் மிச்சல் மார்ஷிற்கு போட்டித்தடை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்குமா இலங்கை?<<

T20 உலகக் கிண்ணத் தொடரில் குழு B இல் காணப்படும் அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே சுப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகியிருக்கின்றது. இந்த நிலையில் அவ்வணியின் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜோஸ் ஹேசல்வூட் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் தாங்கள் மீண்டும் பலமிக்க இங்கிலாந்து அணியினை சந்திக்க எதிர்பார்ப்பதால் அவர்களை தொடரிலிருந்து நொக்அவுட் செய்ய எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

T20 உலகக் கிண்ணத் தொடரில் குழு B இல் காணப்படும் ஏனைய அணிகளில் ஒன்றான இங்கிலாந்து ஒரு புள்ளியுடன் மாத்திரம் காணப்படுவதினால் சுப்பர் 8 சுற்று செல்வதற்கான வாய்ப்பு தற்போது குறைவான நிலையில் காணப்படுகின்றது. எனினும் இங்கிலாந்து அடுத்த சுற்றுக்குச் செல்ல அதிக ஓட்ட விகிதத்துடன் (NRR) தமக்கு எஞ்சியிருக்கும் போட்டிகளில் வெற்றி பெறும் சந்தர்ப்பத்தில் அவ்வணிக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். எனவே இங்கிலாந்தின் தற்போதைய நிலைமைகளை கருத்திற் கொண்டே ஜோஸ் ஹேசல்வூட் அவ்வாறு கருத்து ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

மறுமுனையில் குழு B இல் அவுஸ்திரேலியாவிற்கு அடுத்ததாக 5 புள்ளிகளுடன் காணப்படும் ஸ்கொட்லாந்து அணிக்கே சுப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. ஸ்கொட்லாந்து அணி தமக்கு அவுஸ்திரேலியாவுடன் எஞ்சியிருக்கும் போட்டியில்

தோல்வியினைத் தழுவிய போதிலும் சிறந்த ஓட்ட விகிதத்தைப் பேணுவது அவ்வணிக்கு சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பினைப் பெற்றுத் தரும்.

எனவே அவுஸ்திரேலிய அணி ஸ்கொட்லாந்துடன் தாம் ஆடவிருக்கும் போட்டியில் ஸ்கொட்லாந்திற்கு ஏற்றவாறு ஓட்ட விகிதத்தைப் பேணுவதானது இங்கிலாந்தினை தொடரில் இருந்து வெளியேற்ற காரணமாக முடியும்.

>>சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்குமா இலங்கை?<<

இவ்வாறு அவுஸ்திரேலிய அணி வேண்டுமென்ற போட்டியின் முடிவுகளைத் தீர்மானிக்க ஆடுவது, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மிச்சல் மார்ஷிற்கு போட்டித் தடையினை பெற்றுக் கொடுக்கும் செயற்பாடு என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது மிச்சல் மார்ஷிற்கு அவுஸ்திரேலிய அணி சுப்பர் 8 சுற்றில் விளையாடவிருக்கும் இரண்டு போட்டிகளில் தடை வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

குழு B அணிகளான நமீபியா மற்றும் ஓமான் ஆகியவை T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறியிருப்பதோடு, அவுஸ்திரேலியா – ஸ்கொட்லாந்து அணிகள் இடையிலான போட்டி சனிக்கிழமை (16) சென்.லூசியாவில் நடைபெறுகின்றது.

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<