ICC இன் சிறந்த வீரர்களுக்கான பரிந்துரையில் இரு இலங்கை வீரர்கள்

246

2022ஆம் ஆண்டின் மே மாதத்திற்கான சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) சிறந்த வீரர்களுக்கான பரிந்துரையில், இலங்கை கிரிக்கெட் அணியினைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றனர்.

சமரியின் அபார சதத்துடன் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் அணி

அதன்படி பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய இலங்கை அணியின் அஞ்சலோ மெதிவ்ஸ் மற்றும் அசித்த பெர்ணான்டோ ஆகிய வீரர்களே, ICC இன் சிறந்த வீரர்களுக்கான பரிந்துரையில் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அஞ்செலோ மெதிவ்ஸ் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் இரண்டு சதங்கள் அடங்கலாக 344 ஓட்டங்கள் குவித்திருந்ததோடு, தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராகவும் மாறியிருந்தார்.

பங்களாதேஷ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 199 ஓட்டங்கள் குவித்திருந்த அஞ்செலோ மெதிவ்ஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனன்ஞய டி சில்வா மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோருடன் இணைந்து பெற்ற இணைப்பாட்டங்கள் (முறைய 102, 199 ஓட்டங்கள்), பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரினை 1-0 என இலங்கை வெற்றி கொள்வதற்கும் காரணமாக அமைந்திருந்தது.

அத்துடன் அஞ்செலோ மெதிவ்ஸ், தனது அபார துடுப்பாட்டம் காரணமாக டெஸ்ட் துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையிலும் 15ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக கடந்த மாதத்தில் சிறந்த பல சிறந்த பெறுபேறுகளை வெளிக்காட்டியிருந்தமை அஞ்செலோ மெதிவ்ஸ், சிறந்த வீரர்களுக்குரிய பரிந்துரைக்கு உள்ளானமைக்கு காரணமாக அமைகின்றது.

இலங்கை – அவுஸ்திரேலிய தொடருக்கான நடுவர் குழாம் அறிவிப்பு

மறுமுனையில் சிறந்த வீரருக்கான பரிந்துரையில் உள்வாங்கப்பட்டுள்ள அசித்த பெர்னாண்டோ, பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் மொத்தமாக 13 விக்கெட்டுக்களை கைப்பற்றி தொடரில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்த வீரராக மாறியதோடு, பங்களாதேஷ் டெஸ்ட் தொடரினை இலங்கை கைப்பற்ற மற்றுமொரு பிரதான காரணமாகவும் இருந்தார்.

இதேவேளை பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் சிறந்த ஆட்டத்தினைக் காண்பித்த, பங்களாதேஷ் அணியின் அனுபவ துடுப்பாட்டவீரரான முஷ்பிகுர் ரஹீமும், சிறந்த வீரர்களுக்கான பரிந்துரையில் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. முஷ்பிகுர் ரஹீம் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 303 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ICC இன் மே மாதத்திற்கான சிறந்த வீரர் பரிந்துரையில் இடம்பெற்ற வீரர்களுக்கு உங்களுடைய வாக்கினை வழங்குவதற்கு – https://bit.ly/3zkus0e

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<