ஆப்கானின் T20 உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு

110

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் அடங்கிய தமது அணிக் குழாத்தினை வெளியிட்டிருக்கின்றது.

ஆப்கானிஸ்தானின் T20 உலகக் கிண்ண குழாம், ஆசியக் கிண்ணத்தில் பங்கெடுத்த அதே அணியுடன் சில மாற்றங்கள் அடங்கலாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

T20 உலகக் கிண்ணத்திற்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

அந்தவகையில் ஆப்கானிஸ்தானின் T20 உலகக் கிண்ண குழாத்தில் அறிமுக வேகப்பந்துவீச்சாளரான சலீம் சயிப் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார். இவர் தவிர மணிக்கட்டு சுழல்பந்து சகலதுறைவீரர் கைஸ் அஹ்மட், மத்திய வரிசை துடுப்பாட்டவீரர் தார்வீஷ் ரசூலி ஆகியோரும் T20 உலகக் கிண்ணக் குழாத்தில் இடம்பெற்றிருக்கின்றனர்.

இந்த வீரர்களில் கைஸ் அஹ்மட் மற்றும் சலீம் சயிப் ஆகியோர் அண்மையில் உள்ளூர் T20 லீக் தொடரில் திறமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதன் காரணமாகவே அவர்கள் உலகக் கிண்ண வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை ஆசியக் கிண்ண குழாத்தில் காணப்பட்ட சமியுல்லா சின்வாரி, ஹஸ்மத்துல்லா சஹிதி, அப்சார் சஷாய், கரீம் ஜனாட் மற்றும் நூர் அஹ்மட் ஆகியோருக்கு T20 உலகக் கிண்ண அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதேநேரம் அணிக்கு நம்பிக்கை தர எதிர்பார்க்கப்படும் துடுப்பாட்டவீரர்களாக ஹஸ்ரத்துல்லா சஷாய், இப்ராஹிம் சத்ரான் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் காணப்பட அணிக்கு நம்பிக்கை தரும்

பந்துவீச்சாளர்களாக ரஷீட் கான், பஷால் ஹக் பரூக்கி மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் காணப்படுகின்றனர்.

35 மில்லியன் ரூபாவுக்கும் அதிக விலை போகவுள்ள சாமிக கருணாரத்ன

T20 உலகக் கிண்ணத் தொடருக்கான சுபர் 12 சுற்றில் நேரடி வாய்ப்பினைப் பெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் அணியின் குழுவில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் காணப்படுவதோடு, ஆப்கானிஸ்தான் அணி தமது முதல் உலகக் கிண்ணப் போட்டியில் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி இங்கிலாந்துடன் ஆடவிருக்கின்றது.

ஆப்கானிஸ்தானின் T20 உலகக் கிண்ண குழாம்

மொஹமட் நபி (அணித்தலைவர்), நஜிபுல்லா சத்ரான் (பிரதி தலைவர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், அஸ்மத்துல்லா ஒமர்சய், தர்வீஷ் ரசூலி, பரீட் அஹ்மட் மலிக், பசால் ஹக் பரூக்கி, ஹஸ்ரத்துல்லா சஷாய், இப்ராஹிம் சத்ரான், முஜிபுர் ரஹ்மான், நவீன் உல் ஹக், கைஸ் அஹ்மட், ரஷீட் கான், சலீம் சபி, உஸ்மான் கனி

மேலதிக வீரர்கள் – அப்சார் சஷாய், ஷரபுத்தீன் அஷ்ரப், குல்படின் நயீப், ரஹ்மத் சாஹ்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<