வலைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தின் C குழுவில் இலங்கை!

Netball World Cup 2023

55
Sri Lanka in Pool C for Netball World Cup

தென்னாபிரிக்காவில் அடுத்த ஆண்டு (2023) நடைபெறவுள்ள வலைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தில் இலங்கை அணி குழு Cயில் இடம்பெற்றுள்ளது.

தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் வலைப்பந்தாட்ட உலகக்கிண்ணம் நடைபெறவுள்ளது. இதற்கான குழு விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

>> புதிய பயிற்சியாளரை தேடும் இலங்கை வலைப்பந்து அணி

குழு Cயில் இலங்கை அணி இடம்பெற்றுள்ளதுடன், இந்த குழுவில் உலக தரவரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ள ஜமைக்கா, தொடரை நடத்தும் மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ள தென்னாபிரிக்கா மற்றும் 9வது இடத்தில் உள்ள வேல்ஸ் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.

குறிப்பிட்ட இந்த குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணியானது, சர்வதேச தரவரிசையில் 16வது இடத்தை பிடித்துள்ளது. நடப்பு ஆசிய சம்பியனான இலங்கையின் மிகச்சிறந்த தரவரிசை இடமாகவும் இது அமைந்திருக்கிறது.

உலகக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் 16 அணிகள் பங்கேற்பதுடன், அணிகள் நான்கு குழுக்களாக வகுக்கப்பட்டுள்ளன. இதில் குழு Aயில் அவுஸ்திரேலியா, டொங்கா, ஜிம்பாப்வே மற்றும் பீஜி ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

Bகுழுவில் இங்கிலாந்து, மலாவி, ஸ்கொட்லாந்து மற்றும் பார்படோஸ் அணிகள் இடம்பிடித்துள்ளதுடன், C குழுவில் ஜமைக்கா, தென்னாபிரிக்கா, வேல்ஸ் மற்றும் இலங்கை அணிகளும், D குழுவில் நியூசிலாந்து, உகண்டா, ட்ரினிடேட் மற்றும் டொபேகோ மற்றும் சிங்கபூர் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

உலகக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடர் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 28ம் திகதி முதல் ஆகஸ்ட் 6ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<