உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அறிமுகமாகும் புதிய விதிகள்

World Test Championship - 2021

260
AFP

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சமநிலையில் முடிந்தால் வெற்றியாளரை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) விளக்கம் அளித்துள்ளது. 

அத்துடன், ICC இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கடைபிடிக்க வேண்டிய மூன்று புதிய விதிமுறைகளை ICC வெளியிட்டுள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: 4 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் முதல்முறையாக ஒழுங்குசெய்யப்பட்டுள்ள டெஸ்ட் உலகக் கிண்ணம் என்று அழைக்கப்படும் ICC டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இறுதிப் போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இங்கிலாந்தில் தற்போது தங்கியுள்ள நியூசிலாந்து அணி, டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது

இந்திய அணியினர் இந்த மாதம் இறுதியில்தான் இங்கிலாந்து புறப்பட்டு அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளனர்

எனவே, உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இறுதிப் போட்டி தொடர்பிலான சில தீர்மானங்களையும் நடைமுறைகளையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் ஜொப்ரா ஆர்ச்சர்

இதன்படி, ICC டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி என்ற காரணத்தால், சில வேளைகளில் குறித்த டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி அற்ற நிலையில் முடிவுக்கு வருமாக இருந்தால் இரண்டு நாடுகளும் இணை சம்பியன்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று ஐசிசி அறிவித்திருக்கின்றது. 

ஐந்து நாட்களைத் தாண்டி கூடுதலாக ஒருநாள் இந்த டெஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களில் மழை அல்லது வேறு காரணங்களால் ஆட்டம் தடைப்பட்டால், இழந்த நேரங்களை ஐந்து நாட்களுக்குள் முடிக்காவிட்டால், மேலதிக நாள் பயன்படுத்தப்படும்

மற்றபடி ஐந்து நாட்களிலும் முடிவு எட்டப்படாவிட்டால், முடிவுக்காக மேலதிக நாளைப் பயன்படுத்த முடியாது. மேலதிக நாளைப் பயன்படுத்துவது தொடர்பாக கடைசி நாளின் கடைசி ஒரு மணி நேரத்தின்போது நடுவர் அறிவிப்பார்.  

அத்துடன், இந்தப் போட்டியில் Grade-1 Duke பந்துகள்தான் பயன்படுத்தப்படும். இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்ற SG பந்துகளோ அல்லது நியூசிலாந்துக்கு ஏற்ப kookaburra பந்துகளோ பயன்படுத்தப்படாது

மேலும், DRS மேல் முறையீடு செல்வதற்கு முன்பு, நடுவர்களிடம் எதற்காக ஆட்டமிழப்பு கொடுத்தீர்கள் எனக் கேட்டுவிட்டு, பிறகு DRS எடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையுடனான ஒருநாள் தொடரை தவறவிடும் இங்கிலாந்து பயிற்சியாளர்

அதேபோல, களத்தில் சர்ச்சை ஏற்படும்போது நடுவர்கள் போட்டி மத்தியஸ்தரிடம் உடனே முறையிட வேண்டும். தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது எனவும் .சி.சி இன் புதிய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

துடுப்பாட்ட வீரர்கள் ஓடும்போது ஒரு வீரர் கிரீஸை சரியாகத் தொடாமல் ஓடிவிட்டால் (Short Run) மூன்றாவது நடுவர் தாமாகவே அதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, அந்த முடிவைக் கள நடுவர்களுக்கு, அடுத்த பந்து வீசுவதற்குள் தெரிவிப்பார்.

LBW ஆட்டமிழப்பு வழங்கும் முறையில் பந்து ஸ்டெம்ப்பின் மேல் இருக்கும் பெயில்ஸ் பாதிப் பகுதியைத் தொடுமாறு சென்றாலும் அது Umpires Call வழங்கப்படும். அதேபோல ஸ்டெம்பின் உயரம் மட்டுமல்லாது, பரப்பளவிலும் பாதியளவுக்கு பந்து உரசிச் செல்லும் என்றாலும் Umpires Call வழங்கப்படும்

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<