உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: 4 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி

World Test Championship - 2021

230

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 4 ஆயிரம் ரசிகர்களுக்கு போட்டியை பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிபோட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் ஜூன் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெற உள்ளது

இதில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த இந்தியா, 2ஆவது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. முதன்முறையாக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளதால் சம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இதனிடையே, இங்கிலாந்தில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் இந்தப் போட்டியைப் பார்வையிட சுமார் 4 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் – ஐ.சி.சி

இதுதொடர்பில் ஹாம்ப்ஷெயார் கவுண்டி கழகத்தின் தலைவர் ரோட் பிரான்ஸ்குரோவ் கருத்து தெரிவிக்கையில்,

.சி.சியும், இங்கிலாந்து கிரிக்கெட் சபையும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு 4 ஆயிரம் பார்வையாளர்களை அனுமதித்துள்ளது. இதில் 50 சதவீத டிக்கெட்டுகள் .சி.சி வசம் சென்றுவிடும். எனவே மீதமுள்ள 2 ஆயிரம் டிக்கெட்டுகளை நாங்கள் விற்பனை செய்வோம். டிக்கெட் குறித்து ஏற்கெனவே ரசிகர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன என தெரிவித்தார்

இதனிடையே இந்த இறுதிப் போட்டிக்கான விளையாட்டு நிலைமைகள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று .சி.சி தெரிவித்துள்ளது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…