இலங்கையுடனான ஒருநாள் தொடரை தவறவிடும் இங்கிலாந்து பயிற்சியாளர்

Sri Lanka Tour of England - 2021

237
Chris Silverwood

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் நடைபெறவுள்ள ஒருநாள் தொடர்களிலிருந்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வூட் விலகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இங்கிலாந்து அணி இந்தியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி முதல் விளையாடவுள்ளது.

இதற்குமுன் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனாள ஒருநாள் மற்றும் T20 தொடர்கள் நடைபெறவுள்ளன. இதில் இலங்கை அணியுடனான தொடர் ஜுன் 23ஆம் திகதியும், பாகிஸ்தான் அணியுடனான தொடர் ஜுலை 8ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.

>> இலங்கை அணியின் அடுத்தடுத்த தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு

எனவே, இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான கிறிஸ் சில்வர்வூர்ட்டுக்கு தொடர்ந்து பனிச்சுமை வழங்காமல், குறித்த தொடர்களில் இருந்து ஓய்வு வழங்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி, இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளர்களான போல் கொலிங்வூட் மற்றும் கிரஹெம் த்ரோப் ஆகிய இருவரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான ஒருநாள் தொடரில் இஙகிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவுள்ளனர்

முன்னதாக, இவ்வருட முற்பகுதியில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியிருந்ததுடன், இந்தத் தொடர் நிறைவடைந்த பிறகு பயிற்சியாளர்களுக்கும் சிறிதுகாலம் ஓய்வு வழங்குவது மிகவும் நல்லது என அந்த அணியின் பயிற்சியாளர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா

இங்கிலாந்து அணி எதிர்வரும் மூன்று மாதங்களில் 7 டெஸ்ட், 12 மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளை நடத்தவுள்ளது. அதன்பிறகு பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.

அதன்பிறகு, ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணி, அவுஸ்திரேலியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே, எதிர்வரும் ஜுன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாடவுள்ளது

இதற்கான இலங்கை அணி எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் திகதி இங்கிலாந்தை வந்தடையவுள்ளதுடன், முதலாவது T20 போட்டி ஜுன் 23ஆம் திகதி கார்டிப்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<