ThePapare.com: பிரீமியர் லீக் 7ஆவது வாரத்தின் சிறந்த வீரர் யார்?

101

இங்கிலாந்து பிரீமியர் லீக் (EPL) தொடரின் ஏழாவது வாரத்தின் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் ThePapare.com  ரசிகர்களான உங்களுக்கு வாரத்தின் சிறந்த வீரருக்காக வாக்களிக்க முடியும்.

ரசிகர்களாகிய உங்களுக்கு வாரத்தின் சிறந்த வீரருக்கு கீழே வாக்களிக்க முடியும்! (வாக்கு முடிவுத் திகதி ஒக்டோபர் 05)

பார்சிலோனா, ரியல் மட்ரிட் அணிகளுக்கு சமநிலை முடிவுகள்

நடைபெற்று வரும் லாலிகா சுற்றுப் போட்டிகளில் …

[socialpoll id=”2521610″]

அலிசன் பெக்கர் (லிவர்பூல்)

எதிரணியின் கோல்களை தடுப்பதில் முக்கிய கருவியாக அந்த அணியின் பிரேசிலைச் சேர்ந்த கோல்காப்பாளர் அலிசன் செயற்பட்டு வருகிறார். செல்சி வீரர்களான வில்லியன் மற்றும் ஈடன் ஹஸார்ட் உறுதியான கோல் பெறும் வாய்ப்பை நெருங்கியபோது அவர் அந்த வாய்ப்புகளை தடுத்தார். போட்டியின் கடைசி நேரத்தில் டானியல் ஸ்டுரிட்ஜ் கோல் பெற்று செல்சிக்கு எதிராக லிவர்பூல் ஆட்டத்தை 1-1 என சமன் செய்தது. அலிசன் இந்த பருவத்தில் 84.21 வீத கோல் தடுப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்டோனியோ ருடிஜர் (செல்சி)

தனது சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவதை தடுப்பதில் சிறப்பாக செயற்பட்ட செல்சியின் ருடிஜர் எதிரணியின் இரண்டு கோல் வாய்ப்புகளை தடுத்தார். லிவர்பூலின் மூன்று தூண்களான முஹமட் சலாஹ், சாடியோ மானே மற்றும் ரொபர்டோ பெர்மினோவின் கோல் முயற்சிகளை அவர் கடினமாக்கினார். லிவர்பூலுக்கு எதிராக செல்சி சமநிலை செய்த இந்த போட்டியில் ருடிஜர் 71 பந்து பரிமாற்றத்தில் ஈடுபட்டார். செல்சி அணிக்காக இவரை விடவும் ஜோர்கின்ஹோ (73) மாத்திரமே அதிக முறை பந்து பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தார்.

சிட்டி, லிவர்பூல், செல்சி ஆதிக்கம்: மன்செஸ்டர் யுனைடெட் தடுமாற்றம்

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் ஏழாவது …

மார்க் நோபிள் (வெஸ்ட் ஹாம்)

தடுமாற்றம் காணும் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் நோபிள் அணித்தலைவருக்கான மற்றொரு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மன்செஸ்டர் யுனைடெட்டுக்கு எதிராக வெஸ்ட் ஹாமின் வேறு எந்த வீரரை விடவும் அவர் அதிக முறை பந்து பரிமாற்றத்தில் (67) ஈடுபட்டார். அதேபோன்று, கோல் பெறுவதற்கும் உதவினார். செல்சிக்கு எதிராக சமநிலை செய்த வெஸ்ட் ஹாம் 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் யுனைடெட் அணியை வீழ்த்தியது.   

ஹரி கேன் (டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர்ஸ்)

இங்கிலாந்து அணித்தலைவரான ஹரி கேன் ஹடர்ஸ்பீல்ட்டுக்கு எதிராக இலக்கை நோக்கி தனது மூன்று உதைகளில் இரண்டு கோல்களை பெற்றார். பிரீமியர் லீக்கில் பெனால்டி வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்பவராக அவர் உள்ளார். தனது பெனால்டி கிக்கை எதிரணி கோல் காப்பாளர் ஜோனஸ் லோஸ்லை தாண்டி வலைக்குள் பறக்கவிட்டார். 2-0 என உறுதியான வெற்றியை பெற்ற ஹொட்ஸ்பூர்ஸ் அணி தனது வெற்றிப் பயணத்தை தொடர்கிறது.

கில்பி சிகுர்ட்ஸன் (எவர்டன்)

புல்ஹாமுக்கு எதிராக சிகுர்ட்ஸனின் தைரியமான ஆட்டத்தின் மூலம் ஐந்து கோல் வாய்ப்புகளை உருவாக்கினார். இது வேறு எந்த எவர்டன் வீரர்களை விடவும் அதிகமாக இருந்தது. அவர் பெனால்டியை கோலாக மாற்ற தவறியபோதும் அவர் பெற்ற இரண்டு கோல்கள் எவர்டனின் வெற்றியை உறுதி செய்வதாக இருந்தது. புல்ஹாமுக்கு எதிராக எவர்டன் 3-0 என வெற்றி பெற முடிந்தது.

ThePapare.com இன் பிரீமியர் லீக் வாரத்தின் சிறந்த வீரர் – மார்க் நோபிள்