தனது 17 வருட கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ஜென்டீன வீரர்

177

அர்ஜென்டீனா கால்பந்து அணியை சேர்ந்தவரும் ரியல் ட்ரிட், நெப்போலி, ஜுவெண்டஸ் மற்றும் செல்சி அணிகளுக்காக விளையாடிய முன்னணி வீரருமான Gonzalo Higuain இந்த பருவாகாலத்துடன் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2005இல் தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையை அரம்பித்த  Gonzalo Higuain, கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்ததன் பின்னர், தற்போது கழகமட்ட போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்

34 வயதான Higuain, 2007 தொடக்கம் 2013 வரை லாலிகாவில் ரியல் மெட்ரிட் கழகத்திற்காகவும், 2013 தொடக்கம் 2016 வரை சீரி A இல் நெப்போலி அணிக்காகவும் தொடர்ந்து 2016 தொடக்கம் 2018 வரை ஜுவென்டஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். அதன் பின்னர் அடுத்த இரண்டு வருடங்களும் ஏசி மிலான் மற்றும் செல்சி அணிகளுக்காக விளையாடிய அவர், தற்போது அமெரிக்காவில் இன்டெர் மியாமி கழகத்திற்காக விளையாடி வருகிறார்.

அர்ஜென்டினா அணிக்காக விளையாடும் போது Higuain 75 போட்டிகளில் 31 கோல்களை அடித்ததுடன் அர்ஜென்டினா 2014 உலகக் கிண்ண இறுதிப் போட்டி மற்றும் 2015 கோபா டெல் ரே கிண்ண இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கழகமட்ட போட்டிகளில் 707 போட்டிகளில் விளையாடியுள்ள Higuain, 333 கோல்களை அடித்துள்ளார். அதில் 264 போட்டிகளில் ரியல் மெட்ரிட் அணிக்காக மட்டும் 121 கோல்களை அடித்துள்ளார். மேலும், தனது கழகமட்ட கால்பந்து போட்டி வரலாற்றல் ரியல் மெட்ரிட் அணியுடன் 3 லாலிகா கிண்ணங்களையும், ஜுவென்டஸ் அணியுடன் 3 சீரி A கிண்ணங்களையும் வென்றுள்ளார்.

தனது ஓய்வு அறிவிப்பு குறித்து கருத்து வெளியிட்ட Higuain, “நான் கால்பந்துக்கு விடைகொடுக்கும் நேரம் வந்து விட்டது. பல சிறந்த தருணங்களை கொடுத்த இந்த போட்டிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு உதவி செய்த அனைத்து கழக பயிற்றுவிப்பாளர்களுக்கும் நன்றி” என தெரிவித்தார்.

Higuain, இந்த பருவகாலம் இன்டெர்மியாமி கழகத்திற்காக இதுவரை 14 கோல்களை அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                                  >> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<