புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய துறைமுக அதிகாரசபை அணி

64

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற முதல்தர கழகங்களுக்கு இடையிலான அழைப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (20) நடைபெறவிருந்த பதினொரு போட்டிகள் சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டன. 

இந்த நிலையில், கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் மோதிய ஆட்டத்தில் டக்வத் லூவிஸ் முறைப்படி துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

தொம்பகொட சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியதுடன், சீரற்ற காலநிலை காரணமாக 36 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இலங்கை சார்பாக அதிவேக ஒருநாள் சதம் குவித்த சந்துன் வீரக்கொடி

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் ஆரம்ப…..

இதன்படி, துடுப்பாடிய கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணிக்காக சானக்க விஜேசிங்க 42 ஓட்டங்களையும், சம்பத் பெரேரா 31 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது மழை குறுக்கிட இலங்கை துறைமுக அதிகார சபை அணிக்கு 22 ஓவர்களுக்கு 68 ஓட்டங்களை பெறவேண்டி ஏற்பட்டது. 

எனினும் அந்த அணி குறித்த ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது.

இலங்கை துறைமுக அதிகார சபை அணிக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய யொஹான் டி சில்வா 50 ஓட்டங்களை எடுத்தார்.

இந்த வெற்றியுடன் B பிரிவில் நடைபெற்ற 4 ஆட்டங்களில் 3 இல் வெற்றியீட்டிய இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.

போட்டியின் சுருக்கம்

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 136/6 (36) – சானக்க விஜேசிங்க 42, சம்பத் பெரேரா 31, சச்சித்ர பெரேரா 20, ரஜீவ வீரசிங்க 2/25

இலங்கை துறைமுக அதிகார சபை கழகம் – 92/2 (22) – யொஹான் டி சில்வா 50

முடிவு – இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் டக்வத் லூவிஸ் முறைப்படி 24 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<