தென்னாபிரிக்க தொடரை தவறவிடும் க்ளென் மெக்ஸ்வெல்!

115

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் க்ளென் மெக்ஸ்வெல் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

க்ளென் மெக்ஸ்வெலின் இடது முழங்கை பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர், தென்னாபிரிக்காவுக்கு எதிரான சுற்றுத் தொடரிலிருந்து  நீக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையுடன் மோதும் இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

இலங்கை அணியுடன் மோதவுள்ள சுற்றுலா இங்கிலாந்து ………….

அவுஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பிக் பேஷ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் போது, இடது முழங்கை பகுதியில் வழி ஏற்படுவதாக மெக்ஸ்வெல் தெரித்துள்ளார். தொடர்ந்து அவரது முழங்கை பகுதியில் வழி அதிகரித்ததன் காணமாக அவருக்கு வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பின்னர் பெறப்பட்ட வைத்திய பரிசோதனை அறிக்கையின் படி, க்ளென் மெக்ஸ்வெலின் முழங்கை பகுதியில் சத்திரச்சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, எதிர்வரும் நாட்களில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், அவர் ஆறு அல்லது எட்டு வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக க்ளென் மெக்ஸ்வெலுக்கு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான சுற்றுத் தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன், ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவடைந்துள்ளன.

ஏற்கனவே, க்ளென் மெக்ஸ்வெல் மன உளைச்சல் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது T20I போட்டிக்கு பின்னர், சர்வதேச போட்டிகளிலிருந்து சிறிய ஓய்வினை எடுத்துக்கொண்டார்.  இதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்கு தீர்மானித்திருந்த போதும், தற்போது உபாதை காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

தனது இந்த உபாதை குறித்து க்ளென் மெக்ஸ்வெல் கருத்து வெளியிடுகையில், “அவுஸ்திரேலிய தேசிய அணிக்காக விளையாடுவதை நான் மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன். எனினும், எனது இந்த முழங்கை உபாதையுடன் போட்டிகளில் விளையாடுவது கடினம். எனவே, உடனடியாக இந்த உபாதைக்கான சத்திர சிகிச்சையை மேற்கொண்டு குணமடைய வேண்டும் என தீர்மானித்துள்ளேன்.

அதேநேரம், இந்த முடிவை ஏற்றுக்கொண்ட பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர், அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறைவேற்று பொது முகாமையாளர் ட்ரெவர் ஹொன்ஸ் மற்றும் அணி வீரர்கள் அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்” என்றார்.

பாகிஸ்தானிடம் இன்னிங்ஸ் தோல்வியடைந்த பங்களாதேஷ்!

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ………..

இதேவேளை, மெக்ஸ்வெலுக்கு பதிலாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I குழாத்தில் டி ஆர்சி ஷோர்ட் இணைக்கப்பட்டுள்ளார் என கிரிக்கெட் அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர் எதிர்வரும் 21ம் திகதி T20I போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<