மகளிர் T20 உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை அறிவிப்பு

167

அடுத்த ஆண்டு (2023) மகளிர் அணிகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும், T20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

T20 உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறும் ஜஸ்ப்ரிட் பும்ரா!

மொத்தம் 10 அணிகள் பங்கெடுக்கும் இந்த மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடர் தென்னாபிரிக்காவில் நடைபெறுகின்றது. இந்த தொடருக்கு 8 அணிகள் நேரடித் தகுதி பெற்ற நிலையில், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் தகுதிகாண் போட்டிகள் மூலம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.

எட்டாவது முறையாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்த T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டி 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இலங்கை மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகள் இடையில் நடைபெறுகின்றது.

அதேநேரம் இந்த தொடரில் பங்கெடுக்கும் அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மோதல்கள் நடைபெறவுள்ளதோடு குழு 1 இல் இலங்கை, பங்களாதேஷ், நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் ஐந்து தடவை உலகக் கிண்ணம் வென்று தொடரின் நடப்புச் சம்பியனாக இருக்கும் அவுஸ்திரேலியா ஆகியவற்றின் மகளிர் அணிகள் காணப்படுகின்றன.

அதேவேளை குழு 2 இல் அயர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றின் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.

உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகள் 2023ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதோடு, குழுநிலைப் போட்டிகளில் ஒவ்வொரு குழுவிலும் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கும், இறுதிப் போட்டியிலும் ஆடும் சந்தர்ப்பத்தினை பெறவிருக்கின்றன. தொடரின் இறுதிப் போட்டி 2023ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி பலமானதா? இல்லையா?

மகளிர் உலகக் கிண்ணத் தொடருக்காக கேப் டவுன், பார்ல் மற்றும் கெபேர்கா (Gqeberha) அரங்குகள் தெரிவு செய்யப்பட்டிருப்பதோடு, தொடரின் நொக் அவுட் சுற்று (அரையிறுதி, இறுதி போட்டி) கேப் டவுன் அரங்கில் நடைபெறுகின்றது.

அத்துடன் தடைகள் ஏதாவது ஏற்படும் சந்தர்ப்பத்தில் மகளிர் உலகக் கிண்ணத்தில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்காக மேலதிக நாட்களும் (Reserve Day) ஒதுக்கப்பட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

போட்டி அட்டவணை

  • பெப்ரவரி 10, 2023 – தென்னாபிரிக்கா எதிர் இலங்கை – கேப் டவுன்
  • பெப்ரவரி 11, 2023 – மேற்கிந்திய தீவுகள் எதிர் இங்கிலாந்து – பார்ல்
  • பெப்ரவரி 11, 2023 – அவுஸ்திரேலியா எதிர் நியூசிலாந்து – பார்ல்
  • பெப்ரவரி 12, 2023 – இந்தியா எதிர் பாகிஸ்தான் – கேப் டவுன்
  • பெப்ரவரி 12, 2023 – பங்களாதேஷ் எதிர் இலங்கை – கேப் டவுன்
  • பெப்ரவரி 13, 2023 – அயர்லாந்து எதிர் இங்கிலாந்து – பார்ல்
  • பெப்ரவரி 13, 2023 – தென்னாபிரிக்கா எதிர் நியூசிலாந்து – பார்ல்
  • பெப்ரவரி 14, 2023 – அவுஸ்திரேலியா எதிர் பங்களாதேஷ் – கெபேர்கா
  • பெப்ரவரி 15, 2023 – பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து – கேப் டவுன்
  • பெப்ரவரி 16, 2023 – இலங்கை எதிர் அவுஸ்திரேலியா – கெபெர்கா
  • பெப்ரவரி 17, 2023 – நியூசிலாந்து எதிர் பங்களாதேஷ் – கேப் டவுன்
  • பெப்ரவரி 17, 2023 – மேற்கிந்திய தீவுகள் எதிர் அயர்லாந்து – கேப் டவுன்
  • பெப்ரவரி 18, 2023 – இங்கிலாந்து எதிர் இந்தியா – கெபேர்கா
  • பெப்ரவரி 18, 2023 – தென்னாபிரிக்கா எதிர் அவுஸ்திரேலியா – கெபேர்கா
  • பெப்ரவரி 19, 2023 – பாகிஸ்தான் எதிர் மேற்கிந்திய தீவுகள் – பார்ல்
  • பெப்ரவரி 19, 2023 – நியூசிலாந்து எதிர் இலங்கை – பார்ல்
  • பெப்ரவரி 20, 2023 – அயர்லாந்து எதிர் இந்தியா – கெபேர்கா
  • பெப்ரவரி 21, 2023 – இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் – கேப் டவுன்
  • பெப்ரவரி 21, 2023 – தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் – கேப் டவுன்
  • பெப்ரவரி 23, 2023 – முதல் அரையிறுதி – கேப் டவுன்
  • பெப்ரவரி 24, 2023 – இரண்டாவது அரையிறுதி
  • பெப்ரவரி 26, 2023 – இறுதிப் போட்டி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<