இலங்கை வருகிறது பாகிஸ்தான் இளையோர் அணி

141

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.  

பாகிஸ்தான் இளையோர் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் ………….

பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்டோர் அணி மற்றும் இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணிகளுக்கு இடையிலான 2 இளையோர் டெஸ்ட் மற்றும் 3 இளையோர் ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர் இம்மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கும் வகையில் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு (21) தினத்தில் நாட்டின் கிரிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்களின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததுடன், 600 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

இவ்வாறு, நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக, பாகிஸ்தான் இளையோர் அணிக்கு எதிரான தொடர் ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. எனினும், தற்போது பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்டோர் அணி இம்மாத இறுதியில் இலங்கை வருவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது.

எவ்வாறாயினும், ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட தொடர் அட்டவணையின் படி, 2 இளையோர் டெஸ்ட் போட்டிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை மொத்தமாக 5 இளையோர் ஒருநாள் போட்டிகள் மாத்திரம் நடைபெறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன.

பாகிஸ்தான் இளையோர் அணி மே மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம்

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கும், பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மே மாதம் இலங்கையில் ….

போட்டித் தொடருக்கான ரொஹைல் நசீர் தலைமையிலான பாகிஸ்தான் இளையோர் அணி எதிர்வரும் 23ம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதுடன், ஜூன் 6ம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர். இதற்கிடையில் எதிர்வரும் மே 26, மே 28, ஜூன் 1, ஜூன் 3 மற்றும் ஜூன் 5ம் திகதிகளில் குறித்த ஐந்து போட்டிகளும் பலத்த பாதுகாப்புடன் நடைபெறவுள்ளன.

எனினும், இந்தப் தொடரினை நடத்துவதற்கான ஒப்புதலை பாதுகாப்பு அமைச்சு வழங்கவில்லை எனவும், அரசாங்கம் ஒப்புதல் வழங்கும் என இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அசாதராண சூழ்நிலை காரணமாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஒருநாள் தொடருக்காக இலங்கை வர மறுத்துள்ள நிலையில், பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு எதிரான இந்த தொடரை நடத்துவது இலங்கை கிரிக்கெட் சபைக்கு முக்கியமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<