கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் சுமோ வீரர்

83

ஜப்பானின் பாரம்பரிய விளையாட்டான சுமோ மல்யுத்த விளையாட்டு வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுமோ மல்யுத்த சங்கம் உறுதி செய்துள்ளது. 

ஜப்பானிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. அங்கே 5,300 மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும், 100க்கும் மேற்பட்டோர் பலியாகியும் உள்ளனர்

கொரோனாவுக்காக ஒருநாள் சம்பளத்தைக் கொடுக்கும் விளையாட்டுத்துறை ஊழியர்கள்

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற…

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டோக்கியோ உள்ளிட்ட முக்கிய 7 நகரங்களில் எதிர்வரும் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு பிறப்பிக்க அந்நாட்டு அரசு கடந்த சில தினங்களுக்கு முன் நடவடிக்கை எடுத்திருந்தது. 

இதனிடையே, ஜப்பான் நாட்டில் பாரம்பரிய விளையாட்டான சுமோ விளையாட்டுக்கான பயிற்சிகள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையேயும் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது

முன்னதாக கடந்த மார்ச் மாதம் கோடைக்கால சுமோ சம்பியன்ஷிப் போட்டித் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர் இன்றி ஒசாகாவில் நடைபெற்றது.

இதேநேரம், எதிர்வரும் மே மாதம் அந்நாட்டின் சுமோ சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடைபெற இருந்தாலும், கொரோனா வைரஸால் அந்த தொடரை தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது

75 வருடங்களின் பின் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இரத்து

புல்தரை மைதானத்தில் நடைபெறும் வருடத்தின் மிகப் பெரிய கிராண்ட்…

இதனையடுத்து பயிற்சிகளின் போது வீரர்கள் முகக் கவசம் அணிந்து கொள்வது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டும் கடைபிடிக்கப்பட்டது

இந்த நிலையில், தரவரிசையில் மிகவும் பின்தங்கிய சுமோ வீரர் ஒருவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு தற்போது கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் பயிற்சி செய்த இடத்தில் இருக்கும் மற்ற அதிகாரிகள், வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என ஜப்பானின் சுமோ அமைப்பு கூறி உள்ளது.  

இந்த சம்பவத்தால் அடுத்த சுமோ போட்டித் தொடர் மே மாதத்தில் நடக்குமா? இரத்து செய்யப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<