மீண்டும் அம்பலமாகும் பிஃபா உலகக் கிண்ண ஊழல் விவகாரம்

154

2018 மற்றும் 2022 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை முறையே ரஷ்யா மற்றும் கட்டாருக்கு வழங்குவதற்கு முன்னாள் பிஃபா நிர்வாகிகள் இலஞ்சம் பெற்றதாக அமெரிக்க அரச வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

கால்பந்தில் இடம்பெறும் ஊழல்கள் தொடர்பில் அமெரிக்காவின் எப்.பி.. நீண்ட காலமாக முன்னெடுத்து வரும் புலன் விசாரணைகளின் ஒரு பெரும் திருப்பமாகவே இந்தக் குற்றச்சாட்டு பார்க்கப்படுகிறது. அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை (06) இடம்பெற்ற விசாரணையின்போதே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

கொரோனா வைரஸும் கால்பந்து உலகும்

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின்………………..

பிஃபா நிறைவேற்றுக்கு குழு உறுப்பினர்களில் பலரும் தமது வாக்கை அளிப்பதற்காக இலஞ்சம் பெற்றது அல்லது கோரியதாக வெளியாகி இருக்கும் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. 

தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பான CONMEBOL முன்னாள் தலைவர் நிகொலஸ் லியோஸ் மற்றும் பிரேசில் கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ரிகார்டோ டிக்சீரா மீது அமெரிக்க நீதித் திணைக்களம் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.  

இந்த இருவரும் 2022 பிஃபா உலகக் கிண்ணத்தை கட்டாருக்கு வழங்குவதற்கு ஆதரவாக தமது வாக்கை அளிப்பதற்கு பகரமாக பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை கட்டார் நிராகரித்துள்ளது.  

டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த பிஃபா முன்னாள் துணைத் தலைவர் ஜக் வோர்னர் 2018 உலகக் கிண்ணத்தை ரஷ்யாவுக்கு வழங்க ஆதரவாக 5 மில்லியன் டொலர் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.   

கடைசியாக நிறைவடைந்த 2018 உலகக் கிண்ணத்தை நடத்தும் உரிமையை இங்கிலாந்தை தோற்கடித்தே ரஷ்யா பெற்றுக்கொண்டது. இதேவேளை, வோர்னர் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கூட்டமைப்பான CONCACAF தலைவராக இருந்தார்.

மற்றொரு பிஃபா முன்னாள் உறுப்பினரான குவாந்தமாலா கால்பந்து சம்மேளனத் தலைவர் ரபாயேல் சல்குவேரோவும் இலஞ்சம் பெற்று ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.     

பரகுவேவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிராக போராடி வந்த லியோஸ் கடந்த ஆண்டு மரணமடைந்தார்

அதேபோன்று 2006 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடையே கால்பந்து போட்டிகளுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் ஊடக உரிமைக்காக இலஞ்சம் பெற்றதற்காக டிக்சீராவுக்கு பிஃபாவினால் கால்பந்து போட்டிகளில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இதில் டிக்சீரா மற்றும் வாழ்நாள் தடைக்கு உள்ளான மற்றொருவரான வோர்னர் இருவரும் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிராக போராடி வருகின்றனர். தாம் இலஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்ட சல்குவேரோ கடந்த ஆண்டு தடைக்கு உள்ளானார்

ஒளிபரப்பு உரிமையை பெறுவதற்கு தென் அமெரிக்க கால்பந்து அதிகாரிகளுக்கு பணம் கொடுத்ததாக அமெரிக்க தொலைக்காட்சியான 21st Century Fox நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.  

சர்வதேச கால்பந்தில் ஊழல் மற்றும் இலஞ்சம் ஆழமாக ஊடுருவி இருப்பதோடு பல தசாப்தங்களாக அது பொதுவான நடைமுறையாக இருந்து வந்துள்ளது என்று எப்.பி.. உதவிப் பணிப்பாளர் வில்லியம் ஸ்வீனி குறிப்பிட்டுள்ளார்.

கால்பந்து போட்டிகள், மைதானங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் ஒப்பந்தங்கள் தொடர்பில் திரைக்குப் பின்னாலுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் சட்டவிரோத கைகுலுக்கல்கள் தொடர்பில் எப்.பி.. புலன்விசாரணை செய்கிறது  

கொரோனாவால் மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…………………

முதல் குற்றச்சாட்டு 2015 ஆம் ஆண்டே முன்னெடுக்கப்பட்டது. ஊழல்மிக்க மில்லியன் கணக்கானவை பற்றி அனைவருக்கும் வெளிக்கொண்டுவர நாம் எதிர்பார்த்திருக்கிறோம். நாம் உங்களை கண்டுபிடிப்போம்என்றும் அவர் சூளுரைத்தார்.  

பின்னணி என்ன?

ரஷ்யா மற்றும் கட்டாருக்கு பிஃபா உலகக் கிண்ணத்தை நடத்தும் உரிமை வழங்கும் சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பு இடம்பெற்று தற்போது கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் எட்டியுள்ளது.  

எனினும் சூரிச்சில் பிஃபா தலைமையகத்திற்கு அருகில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிரடி சுற்றிவளைப்பு தேடுதலை அடுத்தே பல சர்ச்சைக்குரிய விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. கால்பந்து மற்றும் அந்த விளையாட்டின் மூலம் செல்வத்தை அதிகரித்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிர்வாகிகள் பற்றி புலன் விசாரணை ஒன்றை ஆரம்பித்திருப்பதாக அமெரிக்க நீதித் திணைக்களம் அப்போது அறிவித்தது.  

இந்த ஊழல் விவகாரம் பிஃபா வரலாற்றில் பெரும் நெருக்கடி சூழலை ஏற்படுத்தியதோடு அதன் தலைவராக இருந்த செப் பிளாட்டர் தனது பதவியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.   

மொத்தம் 42 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதோடு, 26 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

கட்டார், ரஷ்யா மறுப்பு

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா உலகக் கிண்ண கால்பந்து போட்டியை நடத்தி முடித்திருக்கும் நிலையில் கட்டார் அடுத்த உலகக் கிண்ணத்தை நடத்துவதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் எத்தனை தாக்கத்தை எற்படுத்தும் என்ற கேள்விகள் அதிகரித்து வருகின்றன

மெஸ்ஸியின் விமானம் பிரசல்ஸில் அவசர தரையிறக்கம்

ஸ்பெயினின் டெனரிப் தீவை நோக்கி…………………

எனினும் எப்.பி.. விசாரணையில் கட்டார் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படுவது இது முதல் முறையல்ல.   

பிஃபா உலகக் கிண்ண போட்டியை நடத்தும் உரிமையை பெற அமெரிக்காவை தோற்கடித்து கட்டாருக்கு வாக்களிக்க லியோஸ், டிக்சீரா மற்றும் ஆர்ஜன்டீன கால்பந்து சம்மேளன முன்னாள் தலைவர் ஜுலியோ க்ரொன்டோனா ஆகியோர் பணம் பெற்றதாக முன்னாள் தொலைக்காட்சி நிர்வாகி ஒருவரான அலெஜன்ட்ரோ ப்ரூசாகோ 2017 இல் நியூயோர்க் யூரி சபையிடம் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஊழல் எவ்வாறு இடம்பெற்றது என்பது பற்றிய விபரத்தை அமெரிக்க அரச வழங்கறிஞர்கள் இதற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தவில்லை

எவ்வாறாயினும் அந்த ஊழலின் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி இந்தக் குற்றச்சாட்டில் குறித்துக் கூறப்படவில்லை

கட்டார் மற்றும் ரஷ்யா வாக்கெடுப்பில் எவ்வாறு வெற்றி பெற்றன என்பது பற்றி பல ஆண்டுகளாக சந்தேகங்கள் எழுந்து வந்த நிலையில் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று இரு நாடுகளும் மறுத்து வந்தன. எனினும் 2017 ஆம் ஆண்டில் பிஃபா மேற்கொண்ட விசாரணைகளில் இரு நாடுகளும் தவறிழைக்கவில்லை எனக் கூறப்பட்டது

கால்பந்து உலகை வெல்ல உயிருக்காக போராடும் நெதர்லாந்து நட்சத்திரம்

வளர்ந்து வரும் இளம் கால்பந்து வீரர்………………….

ஆனால் இது தொடர்பில் பிஃபா மீள் விசாரணை செய்ய அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விசாரணை தொடர்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் விசாரணையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் பிஃபா கடந்த செவ்வாய்க்கிழமை (07) கூறியிருந்தது

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ரஷ்யாவின் 2018 உலகக் கிண்ணத்தின் நிறைவேற்று அதிகாரி அலெக்சி சொரோக்கின் இன்டர்பெக்ஸ் செய்தி நிறுவனத்திடம் பதில் அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, “இது வழக்கறிஞர்களின் கருத்து மாத்திரமே. எமது செயற்பாடு வெளிப்படைத் தன்மையுடையதே என்று நான் தொடர்ந்து கூறிகிறேன்

அந்த நேரத்தில் பிஃபா மற்றும் ஊடகத்திடம் அனைத்து கேள்விகளுக்கும் நாம் பதிலளித்ததோடு ஆவணங்களையும் கையளித்தோம்

இது பற்றி மேலும் எதனையும் நாம் கூறவேண்டியதில்லை என்பதோடு எமது செயற்பாடுகளை உருவகப்படுத்தும் முயற்சிகளுக்கு நாம் பதில் கூறப்போவதில்லைஎன்றார்.   

மறுபுறம் நீதிமன்றப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை கடுமையாக மறுக்கிறோம் என்று 2022 உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவது தொடர்பான கட்டாரின் உச்ச சபை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.   

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<