தகவல்களை கசியவிடுபவரைத் தேடும் FFSL

287

இலங்கை கால்பந்து சம்மேளனத்தில் (FFSL) அண்மைய காலத்தில் இடம்பெற்ற பல்வேறு உள்ளக தகவல் கசிவுகள் அண்மைய வாரங்களில் அதிகரித்துள்ள நிலையில் அவை குறித்து FFSL விசாரணை மேற்கொண்டு வருகின்றது.  

லிவர்பூலின் 30 ஆண்டு கனவு நிறைவேறியது

கடந்த வாரம் ஆரம்பமான தேசிய அணியின் பயிற்சி அமர்வுகளின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் பேஸ்புக் பக்கம் ஒன்றின் ஊடாக கசிந்திருந்தன. 

இன்னும், இறுதி முடிவு எடுக்கப்படாத எதிர்கால போட்டித் தொடர்கள் மற்றும் திட்டங்கள் பற்றிய நிறைவேற்றுக் குழு மற்றும் கழகங்களுக்கு இடையிலான சந்திப்புகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்ததோடு இணையதளங்களிலும் வெளியாகி இருந்தன.    

தேசிய அணியின் பயிற்சி அமர்வுகள் 18 வீரர்கள், பயிற்சி குழாம் மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஒருசில அதிகாரிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. சுகாதார மற்றும் விளையாட்டு அமைச்சுகளின் மூலம் வழங்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்கள் காரணமாக இந்த பயிற்சி அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை.  

பார்சிலோனாவுக்கு 6.7 மில். யூரோக்களை செலுத்த நெய்மா உத்தரவு

இந்த வார ஆரம்பத்தில் இடம்பெற்ற கழக மற்றும் நிறைவேற்றுக் குழு சந்திப்புகளில் போட்டித் தொடர்களை மீண்டும் ஆரம்பிப்பது மற்றும் சாத்தியமான புதிய தொடர் ஒன்றை நடத்துவது உட்பட பல விடயங்கள் பற்றி பேசப்பட்டன.    

இந்நிலையில் குறித்த தகவல் கசிவுகள் இலங்கை கால்பந்து சம்மேளன அதிகாரி, பயிற்சி ஊழியர் குழாத்தில் ஒருவர் அல்லது கழக உறுப்பினர் ஒருவரால் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்த விசாரணையை இலங்கை கால்பந்து சம்மேளனம் தீவிரமாகக் கருதுவதோடு இது தொடர்பில் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட எதிர்பார்த்துள்ளது.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<