‘CSK கப்பலில் ஏராளமான ஓட்டைகள்’: டோனி வேதனை

174
IPL

CSK  எனும் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் இருக்கின்றன எனவும், வேகமாக துடுப்பெடுத்தாடக்கூடிய வீரர்கள் இல்லாதது மிகப்பெரிய குறை என்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி தெரிவித்தார்.

டுபாயில் நேற்று (10) நடைபெற்ற .பி.எல் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோற்கடித்தது.  

Video-Dhoni இன் மோசமான ஆட்டத்திற்கு காரணம் என்ன? | Cricket Galatta Epi 39

.பி.எல் வரலாற்றில் சென்னை அணியை இவ்வளவு ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணி இதற்கு முன் வென்றதில்லை. அதிலும் குறிப்பாக, 37 ஓட்டங்களினால் சென்னை அணியை வென்றது அவ்வணியின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும்.

இந்த வெற்றியின் மூலம் ஆர்.சி.பி அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4ஆவது இடத்துக்கு முன்னேறியது. மறுபுறத்தில் சென்னை அணி 7 போட்டிகளில் 5 தோல்வி, 2 வெற்றி என மொத்தம் 4 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் இருக்கிறது.  

இந்தப் போட்டியில் தோல்விக்குப்பின் சென்னை அணியின் தலைவர் எம்.எஸ் டோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:

”நாங்கள் பந்துவீசிய கடைசி 4 ஓவர்கள் இன்னும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி சிறப்பாக முடித்திருப்பது அவசியம் என நினைக்கிறேன். துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை சிறிது கவலையளிக்கும் விதத்தில் இருந்து வந்தது இந்தப் போட்டியில் வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. அதை சரிசெய்ய ஏதாவது செய்வது அவசியம்.

டோனி முறியடித்த சாதனையை சமப்படுத்திய தினேஷ் கார்த்திக்!

துடுப்பாட்டத்தில் வேகமாக துடுப்பெடுத்து ஆடுவது அவசியம் என நினைக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் வேகமாக துடுப்பெடுத்தாட வேண்டும். ஆனால், கடந்த சில போட்டிகளாக நாம் எவ்வாறு விளையாடி இருக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் இது இருக்கிறது.

இந்தப் போட்டியில் 6ஆவது ஓவரிலிருந்து துடுப்பாட்டத்தில் சக்தி இழந்து விட்டதாகவே நினைக்கிறேன். தனிப்பட்ட துடுப்பாட்ட வீரர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் எவ்வளவு நம்பிக்கை அளிக்கிறோம் என்பதில் இருக்கிறது

இந்தப் போட்டியில் 6ஆவது ஓவரிலிருந்து 14ஆவது ஓவர் வரை பந்துவீச்சாளர்களின் திட்டத்துக்கு எதிராக சரியான திட்டமிடல்களை வகுத்து துடுப்பாட்ட வீரர்கள் களமிறங்கவில்லை என நினைக்கிறேன்.

நான் வீரர்களிடம் அடிக்கடி கூறுவது ஒன்றுதான் கடந்த போட்டியின் முடிவைப் பற்றி நினைத்தால் உங்களுக்கு சுமைதான் அதிகரிக்கும் 

எனவே, எஞ்சியுள்ள போட்டியின் மீதும், அதை எவ்வாறு வெற்றியாக மாற்றுவதிலும் கவனம் செலுத்துங்கள் என்றுதான் கூறுவேன். பந்துவீச்சில் எதிரணியை நாங்கள் கட்டுப்படுத்தினோம். ஆனால், கடைசி 4 ஓவர்களில்தான் நாங்கள் தவறுகள் செய்துவிட்டோம்.

Video – விஜய் சேதுபதி முரளியாக மாறுவது உறுதி

எங்கள் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஏராளமான சுழற் பந்துவீச்சாளர்கள், வேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கிறார்கள்ஆனால், ஏதாவது ஒரு இடத்தில்தான் ஒருவர் விளையாடமுடியும். முதலில் 5 பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடினோம், இப்போது 6 பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுகிறோம்

எங்களின் மிகப்பெரிய கவலை துடுப்பாட்டம் தான். அடுத்துவரும் போட்டிகளில் துடுப்பாட்டத்தை சரி செய்ய தீவிரமாக முயற்சிப்போம்” என டோனி தெரிவித்தார்.

இதனிடையே, சென்னை அணி 8ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் எதிர்வரும் 13ஆம் திகதி டுபாயில் சந்திக்கவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<