நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்து T20, டெஸ்ட் குழாம்கள் வெளியீடு

60
©GETTY IMAGES

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட T20 மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் ஆடவுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்தில் ஜொப்ரா ஆர்ச்சருக்கு வாய்ப்பு

இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் உலகக் …..

இந்த சுற்றுப் பயணத்தின் போது நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் மோதவுள்ள இங்கிலாந்தின் T20 மற்றும் டெஸ்ட் குழாம்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. 

வெளியிடப்பட்டுள்ள இங்கிலாந்து டெஸ்ட் குழாத்தில் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஜொன்னி பெயர்ஸ்டோவ் இடம்பெறத் தவறியிருக்கின்றார். ஜொன்னி பெயர்ஸ்டோவ் நடைபெற்று முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 23.77 என்கிற மோசமான துடுப்பாட்ட சராசரியினை வெளிப்படுத்தியதே இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பெறாமல் போனமைக்கு பிரதான காரணமாக அமைகின்றது. எனினும், பெயர்ஸ்டோவ் இங்கிலாந்தின் T20 குழாத்தில் இடம்பெற்றிருக்கின்றார். 

அதேநேரம், இந்த சுற்றுப் பயணத்தின் போது இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஆட நான்கு அறிமுக வீரர்கள் வாய்ப்பினை பெற்றுள்ளனர். குறித்த அறிமுக வீரர்களில் ஷெக் கிராவ்லி மற்றும் டோம் சீப்லி ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக இருப்பதோடு, ஷகீப் மஹ்மூட் வேகப் பந்துவீச்சாளராகவும், மேட் பார்கின்ஸன் சுழற் பந்துவீச்சாளரகவும் காணப்படுகின்றார். இவர்கள் தவிர இங்கிலாந்து டெஸ்ட் குழாத்தில் துடுப்பாட்ட வீரர் ஒல்லி போப்பிற்கும் மீள் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. 

டி20 சர்வதேச அரங்கில் உலக சாதனை படைத்த டேவிட் மில்லர்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் …….

அறிமுக வீரர்களில் ஒருவரான சீப்லி, இங்கிலாந்தின் டிவிஷன் – 1 உள்ளூர் கிரிக்கெட் தொடரில் 5 சதங்கள் அடங்கலாக 1,000 இற்கு மேலான ஓட்டங்களை குவித்திருப்பதோடு, கிராவ்லியும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஜொலித்தே இங்கிலாந்து டெஸ்ட் அணியில் முதற்தடவையாக வாய்ப்பினை பெற்றிருக்கின்றார். 

மறுமுனையில் ஷகீப் மஹ்மூட் இங்கிலாந்தின் டிவிஷன் – 2 உள்ளூர் கிரிக்கெட் தொடரில் இம்முறை 21 விக்கெட்டுக்களை சாய்த்திருப்பதோடு, பார்கின்ஸன் 19 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார். அதோடு, மஹ்மூட் மற்றும் பார்கின்ஸன் ஆகியோருக்கு நியூசிலாந்து சுற்றுப் பயணத்தின் போது இடம்பெறவுள்ள T20 தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

தசை உபாதை ஒன்றில் இருந்து இன்னும் குணமடையாது இருக்கும் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அன்டர்சன் நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் இடம்பெறும் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் சந்தர்ப்பத்தினை இழக்கின்றார். இதேவேளை, ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5ஆவது போட்டியில் ஆடாமல் போன ஜேசன் ரோயும் நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் குழாத்தில் இடம்பெறவில்லை. 

அதேவேளை, நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் இங்கிலாந்து T20 குழாத்தில் பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறாக ஓய்வு வழங்கப்பட்ட வீரர்களில் ஜோஸ் பட்லர், ஜேசன் ரோய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோர் முதன்மையானவர்களாக இருக்கின்றனர். 

மழை காரணமாக கைவிடப்பட்ட இலங்கை, பங்களாதேஷ் A அணிகளுக்கிடையிலான போட்டி

சுற்றுலா பங்களாதேஷ் A கிரிக்கெட் மற்றும் இலங்கை A ……

இன்னும், இங்கிலாந்து T20 குழாத்தில் துடுப்பாட்ட வீரர் டொம் பேன்டன் மற்றும் பேட் ப்ரவுன் ஆகியோரும் முதல்தடவையாக வாய்ப்பினை பெற்றிருக்கின்றனர். இந்த இரண்டு அறிமுக வீரர்களும் இங்கிலாந்தின் T20 பிளாஸ்ட் தொடரில் திறமையை வெளிப்படுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து அணியின் நியூசிலாந்து சுற்றுப் பயணத்தின் போது, நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் நவம்பர் மாதம் 01ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ளதோடு, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் T20 தொடரினை அடுத்து நவம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது.

இங்கிலாந்து டெஸ்ட் குழாம்

ஜோ ரூட் (அணித் தலைவர்), ஜொப்ரா ஆர்ச்சர், ஸ்டுவார்ட் ப்ரோட், ஷெக் கிராவ்லி, ரொரி பேன்ஸ், ஜோஸ் பட்லர், சேம் கர்ரன், ஜோ டென்லி, ஜேக் லீச், ஷகீப் மஹ்மூட், மேட் பார்கின்ஸன், ஒல்லி போப், டொமினிக் சீப்லி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்

இங்கிலாந்து T20 குழாம் 

இயன் மோர்கன் (அணித் தலைவர்), டொம் பேன்டன், சேம் பில்லிங்ஸ், பேட் பிரவுன், சேம் கர்ரன், டொம் கர்ரன், லூயிஸ் கிரகொரி, டென்லி, கிறிஸ் ஜோர்டன், ஷகீப் மஹ்மூட், டாவிட் மலன், மேட் பார்கின்ஸன், ஆதில் ரஷீட், ஜேம்ஸ் வின்ஸ்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<