இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்பத் துடுப்பாட்டவீரருமான திமுத் கருணாரட்ன டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
‘ஒரே உலகம், ஒரே குடும்பம்’ தொடர் பெப்ரவரி 8இல் இந்தியாவில்
அதன்படி இந்த வாரம் காலியில் ஆரம்பமாகும் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி திமுத் கருணாரட்னவின் இறுதி டெஸ்ட் மோதலாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் (06) ஆரம்பமாகும் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது திமுத் கருணாரட்னவின் 100ஆவது டெஸ்ட் போட்டியாக அமையும் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
டெஸ்ட் போட்டிகளில் 40 ஐ நெருங்கிய துடுப்பாட்ட சராசரியுடன் 7000 ஓட்டங்களை குவித்திருக்கும் திமுத் கருணாரட்ன, சுமார் ஒரு தசாப்தத்திற்கு மேலாக இலங்கை அணிக்கு பல சந்தர்ப்பங்களில் வெற்றி பெற பங்களிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் திமுத் கருணாரட்ன சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் சமிந்த வாஸ் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் பின்னர் இலங்கை அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருக்கும் ஏழாவது வீரர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<