இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து லயன்ஸ் அணி

England Lions tour of Sri Lanka 2023

198

இம்மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணி இங்கே இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.

“இந்திய தொடர் புதிய வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு” – ஷானக!

அதன்படி இங்கிலாந்து லயன்ஸ் அணி இலங்கையில் விளையாடவிருக்கும் ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் இலங்கை A கிரிக்கெட் அணியுடன் நடைபெறவிருக்கின்றன. இதில் முதலாவதாக நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெறவுள்ளதோடு, அதனை அடுத்து ஒருநாள் தொடர் இடம்பெறுகின்றது.

இதேநேரம், டெஸ்ட் தொடருக்காக காலி சர்வதேச மைதானம் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, ஒருநாள் தொடரின் போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.

அதேவேளை இந்த கிரிக்கெட் தொடர்கள் அனைத்திற்கும் முன்னதாக இங்கிலாந்து லயன்ஸ் அணி இலங்கை கிரிக்கெட் சபையின் அழைப்பு XI அணியுடன் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி ஒன்றிலும் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

“இந்திய தொடர் புதிய வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு” – ஷானக!

தொடர் அட்டவணை

  • பயிற்சிப் போட்டி l ஜனவரி 25-27 l ஆர். பிரேமதாச மைதானம்
  • முதல் டெஸ்ட் போட்டி l ஜனவரி 31-பெப்ரவரி 3 l காலி சர்வதேச மைதானம்
  • இரண்டாவது டெஸ்ட் போட்டி l பெப்ரவரி 07-10 l காலி சர்வதேச மைதானம்
  • முதல் ஒருநாள் போட்டி l பெப்ரவரி 15 l ஆர். பிரேமதாச மைதானம்
  • இரண்டாவது ஒருநாள் போட்டி l பெப்ரவரி 18 l ஆர். பிரேமதாச மைதானம்
  • மூன்றாவது ஒருநாள் போட்டி l பெப்ரவரி 21 l ஆர். பிரேமதாச மைதானம்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<