ஆப்கானுக்கு எதிராக கடுமையாகப் போராடி வெற்றியீட்டினோம்: கோஹ்லி

244
Getty

உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடுமையாகப் போராடிபெற்றுக்கொண்ட வெற்றி மிகவும் முக்கியமானது என இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி கூறினார்.

இந்திய அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் விளையாடிய போட்டிகளிலேயே நேற்று (22) நடைபெற்ற போட்டிதான் மிக மிக விறுவிறுப்பான போட்டி என்று கூட கூறலாம்.

அந்த அளவிற்கு இந்தியாஆப்கானிஸ்தான் போட்டி பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு தான் இந்தப் போட்டி இத்தனை விறுவிறுப்பாக செல்ல காரணம் என்று கூட கூறலாம். ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் மிக மோசமாக திணறினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய துடுப்பாட்ட வீரர்களின் மோசமான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 224 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பாக விராட் கோஹ்லி அதிகபட்சமாக 67 ஓட்டங்களை எடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியும், ந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் மொஹமட் ஷமியின் ஹெட்ரிக் விக்கெட் உதவியுடன் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி வென்றது.

உலகக் கிண்ணத் தொடரில் தோல்வியடையாத அணியாக முன்னேறும் இந்தியா

This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of …

இந்த நிலையில் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கோஹ்லி கருத்து தெரிவிக்கையில்,

இந்தப் போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் எமது திட்டங்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. அப்போதுதான் எமது முழுமையான திறமையை வெளிப்படுத்தி கடைசி பந்து வரை போராட வேண்டி ஏற்பட்டது. எனவே, இந்த வெற்றியின் மூலம் முன்னோக்கி செல்லும் நம்பிக்கையை எடுத்துக்கொள்கிறோம்” என்று கோஹ்லி கூறினார்.

இதேநேரம், பும்ராவின் பந்துவீச்சு குறித்து பேசிய கோஹ்லி, ”இதுபோன்ற சூழ்நிலைகளில் பும்ரா எப்போதும் இந்தியாவின் துருப்புச் சீட்டாக இருக்கின்றார். இது மிகவும் எளிது. ஆடுகளத்தின் தன்மை மற்றும் போட்டியின் போக்கை கருத்திற்கொண்டு பும்ராவை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த விரும்பினோம். அவருடைய பந்துவீச்சில் விரைவாக விக்கெட்டுகளைப் பெற முடியும்.

அவருக்கு எந்தவொரு இன்னிங்ஸையும் வீழ்த்த முடியும் என்பதை எதிரணிகளும் நன்கு அறிந்து வைத்துள்ளன. 49ஆவது ஓவரில் அவருடைய பந்துவீச்சு நிறைவுக்கு வரும். எனவே, ஷமிக்கு கடைசி ஓவரில் ஓட்டங்களை கட்டுப்படுத்த வேண்டி ஏற்பட்டது. ஆம், எதிர்பார்த்தபடி எமது திட்டம் நன்றாக வேலை செய்தது. சாஹலுக்கு பிந்திய ஓவர்களில் பந்துவீசக் கொடுத்ததும் சாதகத்தைக் கொடுத்திருந்தது” என்றார்.

 

இதேவேளை, காயமடைந்த புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக மொஹமட் ஷமி அணியில் சேர்க்கப்பட்டார், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அவர், 9.5 ஓவர்களில் 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதில் ஹெட்ரிக் விக்கெட்டும் அடங்கும்.

இந்த நிலையில், ஷமியின் பந்துவீச்சு குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த கோஹ்லி, ஒட்டுமொத்தத்தில் அவருடைய பந்துவீச்சு செயல்திறன் மிக்கதாகவும், மிகச் சிறந்ததாகவும் இருந்தது” எனத் தெரிவித்தார்.  

பொதுவாக அனைத்து வீரர்களும் உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கு காத்துக் கொண்டிருப்பர். எனவே, மொஹமட் ஷமிக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பாக இருந்தது. மற்றைய பந்து வீச்சாளர்களைக் காட்டிலும் அவர் வேகத்தில் அதிக தாக்கம் செலுத்தியிருந்தார்.

விஜய் சங்கர் அணியில் இடம்பெற்று களத்தடுப்பில் சிறப்பாக செயல்பட்டார். எனவே, உலகக் கிண்ணத்தில் தங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது அனைவருக்கும் ஒரு மரியாதை” என அவர் தெரிவித்தார்.

நாங்கள் சிறந்ததொரு கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். நீங்கள் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்கிறீர்கள், பின்னர் விக்கெட் மெதுவாக இருப்பதைக் காணலாம். எனவே, 260 அல்லது 270 ஓட்டங்கள் ஒரு நல்ல ஓட்ட எண்ணிக்கையாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.

ஆப்கானிஸ்தானைப் போன்ற அணியில் நிறைய திறமைகளைக் கொண்ட வீரர்கள் இருப்பதால் நீங்கள் விளையாட விரும்பும் வழியில் விளையாட உங்களை அனுமதிக்காது. அவர்கள் உண்மையில் நடுத்தர ஓவர்களில் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். எங்கள் துடுப்பாட்டத் தேர்வு இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். எனினும், இந்தப் போட்டியை வெல்ல முடியும் என்று எம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருந்தது என அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம், இந்திய அணி எதிர்வரும் 27ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளை மென்செஸ்டரில் எதிர்கொள்கிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<