இந்த தோல்வியிலும் நாம் சிறந்த அனுகூலங்களைப் பெற்றுள்ளோம் – ஹேரத்

944

காலியில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாரிய வெற்றி பெற்றது. இது ஓட்டங்கள் அடிப்படையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி சந்திக்கும் மிகப்பெரிய தோல்வியாகும்.

முதல் டெஸ்ட்டை பறிகொடுத்த இலங்கை அணி

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் காலி சர்வதேச கிரிக்கெட்…

இலங்கை அணி களத்தடுப்பு, பந்துவீச்சு, துடுப்பாட்டம் என்று அனைத்து துறைகளிலும் இந்தியாவுக்கு எதிராக மோசமாக ஆடியது. நான்கு நாட்களுடன் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியை அடுத்து இலங்கை அணி போட்டிகளை வென்று தரும் அசேல குணரத்னவை இழந்திருப்பதோடு தனது முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. அதேபோன்று அண்மையில் நியமிக்கப்பட்ட டெஸ்ட் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தனது நியுமோனியா காய்ச்சலில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.     

“எனது கைவிரலை நேற்று எக்ஸ் ரே (X-ray) எடுத்து பார்த்தபோது எந்த ஒரு முறிவையும் காட்டவில்லை. இதே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் முறிவு ஏற்பட்டதே அங்கு சற்று வீக்கமும் வேதனையும் இருப்பதற்கு காரணம். அடுத்த சில தினங்களில் சுகம் பெற்றுவிடுவேன் என்று நம்புகிறேன். சந்திமால் பற்றி கூறப்போனால் இதுவரை எந்த உறுதியான செய்தியும் கிடைக்கவில்லை. அவர் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று தற்போதைய காயங்கள் தொடர்பில் ஹேரத் குறிப்பிட்டார்.

மெல்பர்ன் நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்த ஷிகர் தவான் முரளி விஜயிற்கு பதில் அணியில் இடம்பிடித்து அதிரடியாக 168 பந்துகளில் 190 ஓட்டங்களை விளாசி ஆட்ட நாயகன் விருதை வென்றார். “அப்போதைய நிலையில் அவர் தொடர்பில் எமக்கு சில திட்டங்கள் இருந்தபோதும் நாம் அதனை செயற்படுத்துவதில் தோல்வி கண்டோம். உதாரணத்திற்கு கூறுவதென்றால் நாம் அவருக்கு அதிக அளவு இடைவெளி கொடுத்தோம். போட்டியின் முதல் பகுதியில் ஆட்டம் எம்மை விட்டு கைநழுவ ஆரம்பித்தது. நாம் மீண்டும் போட்டிக்கு திரும்பியபோது அவரது அற்புதமான ஆரம்பத்துடன் போட்டி விலகிச் சென்றது” என்று தவானின் அபாரமான ஆட்டம் குறித்து ஹேரத் விபரித்தார்.

304 ஓட்ட இடைவெளில் போட்டியை வென்றதானது இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் பெற்ற மிகப்பெரிய டெஸ்ட் வெற்றியாகும்.

இலங்கை அணியின் மந்தமான பந்துவீச்சில் எதிரணியின் மூன்று துடுப்பாட்ட வீரர்கள் சதம் பெற்று அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்ற நிலையில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு உதவாத ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் களத்தடுப்பில் சிறப்பாக செயற்பட்டதோடு அவர்களது வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை சாய்த்தனர். சுழற்பந்து வீச்சாளர்களும் ஆடுகளத்தை சிறப்பாக பயன்படுத்தினர்.

ரங்கன ஹேரத்தின் விரலில் முறிவு இல்லை – குருசிங்க

காலியில் நடைபெறும் இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை…

“இன்னும் சில பகுதிகளில் நாம் அதிக அவதானம் செலுத்தி அவைகளை மேம்படுத்தவேண்டியுள்ளது. குறிப்பாக நான்கைந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் வேளையில் இன்னிங்ஸின் கடைசி பகுதியில் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்கள் பெறுவதை அனுமதிக்கக் கூடாது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலே, நாம் பெப்ரவரி மாதத்திலேயே கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடினோம். அது தொடக்கம் அதிகமாக ஒருநாள் போட்டிகளிலேயே விளையாடினோம். இதற்கு இடையில் எம்மை தயார்படுத்த போதிய அவகாசம் கிடைக்கவில்லை. அந்த கோணத்தில் பார்த்தோம் என்றால் நாம் பள்ளத்தில் இருந்து மீண்டும் எழுந்து டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றிருப்பது சிறப்பானதாகும். அந்த கோணத்தில் பார்த்தால் நாம் நன்றாக ஆடியிருக்கிறோம்” என்று தனது 17ஆவது டெஸ்ட் சதத்தை பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி போட்டிக்கு பின் குறிப்பிட்டார்.

பிரதிகூலங்களுக்கு அப்பால் இலங்கை அணி சில அனுகூலங்களுடனேயே காலி டெஸ்டில் இருந்து முன்னேற எதிர்பார்த்துள்ளது. டில்ருவன் பெரேரா இரண்டு இன்னிங்சுகளிலும் தன்னை ஒரு துடுப்பாட்ட வீரராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களைப் பெற்றார். அதேபோன்று திமுத் கருணாரத்ன கடைசி இன்னிங்ஸில் போராடி 92 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால் நுவன் பிரதீப் முதல் இன்னிங்ஸில் 132 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அபாரமான பந்துவீச்சு இலங்கை அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

(திமுத் கருணாரத்ன) சிறந்த ஒரு வீரர் என்பது எம் அனைவருக்கும் தெரியும். இதற்கு முன்னரும் இந்த தரத்தில் அவர் தன்னை நிரூபித்துள்ளார். இந்த வகை கிரிக்கெட்டில் அவருக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. இலங்கையின் ஒரு முன்வரிசை வீரராக அவர் உறுதியாக உள்ளார். அதேபோன்று, நுவன் பிரதீப் முதல் இன்னிங்ஸில் நன்றாக பந்து வீசினார் என்று நான் நினைக்கிறேன். தனது ஒவ்வொரு பந்துவீச்சு சுற்றிலும் விக்கெட் ஒன்றை வீழ்த்தும் வீரர் ஒருவராக அவர் உள்ளார். சிறந்த இடங்களுக்கு அவர் பந்தை வீசினார். அதுவே என்னை பொறுத்தவரை நல்லதாகவும் முகம்கொடுக்க சவால் கொண்டதாகவும் இருந்தது. அவருக்கு முகம் கொடுத்த அனைவரும் பந்துவீச்சில் ஏதோ செய்யப்போகிறார் என்று உணர வைத்தார். ஏதிரணியைச் சேர்ந்த இந்த இருவரும் திறமையை வெளிப்படுத்தினார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்றும் கோஹ்லி குறிப்பிட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அணி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கும் நிலையில் இலங்கை அணி அந்த சவாலுக்கு முகம்கொடுக்க தயாரான நிலையிலேயே அடுத்த டெஸ்ட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி இலங்கை அணி கடுமையாக போராடத் தயாரான நிலையிலேயே களமிறங்க வேண்டிய நிலைக்கு முகம்கொடுத்துள்ளது.

“நாம் இதனை விடவும் நிச்சயமாக சிறந்ததொரு அணி. எமக்கு எதிராக அணி ஒன்று மிக நீண்ட காலத்திற்கு பின்னரே 600 ஓட்டங்களைப் பெற்றதாக நான் நினைக்கிறேன். மற்றொரு விடயம், பல இந்திய துடுப்பாட்ட வீரர்கள் சதங்களை பெற்றபோதும், எமது பெரும்பாலான துடுப்பாட்ட வீரர்கள் மூன்று இலக்க ஓட்டத்தை நெருங்கிய நிலையிலேயே ஆட்டமிழந்தார்கள். இதுவும் போட்டியின் மிகப்பெரிய வித்தியாசங்களில் ஒன்று” என்று ஹேரத் கூறினார்.