தென்னாபிரிக்காவின் சிறந்த கிரிக்கெட் வீரராக குயின்டன் டி கொக் தேர்வு

240

தென்னாபிரிக்க கிரிக்கெட்டின் சிறந்த வீரராகவும், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் அந்த அணியின் ஒருநாள் மற்றும் T20 அணித் தலைவர் குயின்டன் டி கொக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் இரவு (04) வீடியோ Confrence மூலம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது

தென்னாபிரிக்கா கிரிக்கெட்டில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ்

இதன்படி, இந்த ஆண்டுக்கான தென்னாபிரிக்காவின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் ஆகிய இரட்டை விருதுகளை அந்த அணியின் ஒருநாள் போட்டி அணியின் தலைவர் குயின்டன் டி கொக் தட்டிச் சென்றார்

முன்னதாக குயின்டன் டி கொக் ஏற்கனவே 2017ஆம் ஆண்டிலும் சிறந்த வீரர் விருதை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன், சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆகிய இரண்டு விருதுகளை தட்டிச் சென்ற 6ஆவது தென்னாபிரிக்க வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்

இதனிடையே, டெஸ்ட் கிரிக்கெட்டில் குயின்டன் டி கொக் சிறந்த விக்கெட் காப்பாளராகவும், துடுப்பாட்ட வீரராகவும் ஜொலித்து வருவதாக தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபையின் இடைக்கால நிறைவேற்று அதிகாரி ஜெக்குவஸ் போல் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும், அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இரண்டிலுமே மிகச்சிறந்த வீரராக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்

இதற்குமுன் ஜக் கலிஸ் (2004, 2001), மக்காயா நிட்டினி (2005,2006), ஹசீம் அம்லா (2010,2013), ஏபி.டி. வில்லியர்ஸ் (2014,2015), ககிசோ ரபாடா (2016,2018) ஆகியயோர் தலா 2 தடவைகள் இவ்விருதினை வென்றிருந்தனர்

இதேநேரம், ஒருநாள் மற்றும் T20 போட்டியின் சிறந்த வீரராக வேகப் பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி தேர்வாகியதுடன், சிறந்த அறிமுக வீரருக்கான விருது ஆன்ரிச் நொர்ட்ஜேவுக்கு வழங்கப்பட்டது.  

இதனிடையே, தென்னாபிரிக்க இரசிகர்களின் மனதை வென்ற அபிமானமிக்க வீரர் விருதினை அந்த அணியின் அனுபவமிக்க வீரரான டேவிட் மில்லர் தட்டிச் சென்றார்.

அத்துடன், தென்னாபிரிக்க பெண்கள் கிரிக்கெட்டில் ஆண்டின் சிறந்த வீராங்கனை மற்றும் சிறந்த ஒருநாள் போட்டி வீராங்கனை ஆகிய விருதுகளை 21 வயதான ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான லாரா வேல்வார்ட்டுக்கு வழங்கப்பட்டது

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…