இலங்கையுடனான எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகிய டு ப்ளெசிஸ்

212

தோள்பட்டை உபாதைக்கு உள்ளாகி இருக்கும் தென்னாபிரிக்க அணித் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் இலங்கை சுற்றுப் பயணத்தின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இலங்கை அணியுடனான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியின்போது பிடியெடுப்பொன்றை பெற முயன்றபோதே டு ப்ளெசிஸுக்கு உபாதை ஏற்பட்டது.

”வலது தோள்பட்டையின் சுற்றுப்பட்டை ஒன்றில் காயம் ஏற்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக இந்த சுற்றுப்போட்டியின் எஞ்சிய போட்டிகளில் அவர் இடம்பெற மாட்டார். அவர் முழுமையாக சுகம் பெறுவதற்கு ஆறு வார மறுசீரமைப்புக் காலம் தேவைப்படுகிறது. அவர் போட்டிகளுக்கு திரும்பும் திகதி தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையால் எதிர்காலத்தில் உறுதி செய்யப்படும்” என்று தென்னாபிரிக்க அணியின் முகாமையாளர் டாக்டர் மொஹமது மூசாஜி குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக தென்னாபிரிக்காவிடம் ஒருநாள் தொடரை இழந்துள்ள இலங்கை

தென்னாபிரிக்க அணி பதில் அணித் தலைவர் ஒருவரை நியமிக்கவிருப்பதோடு மாற்று வீரர் ஒருவரை அழைக்காமல் இருக்க தீர்மானித்துள்ளது.

இலங்கையுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருப்பதோடு, டு ப்ளெசிஸ் இன்றி அந்த அணி எஞ்சிய இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி-20 போட்டியில் ஆடவுள்ளது.     

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<