டயலொக் SLC அழைப்பு T20 லீக்கின் போட்டி அட்டவணையில் மாற்றம்!

Dialog-SLC Invitational T20 League 2021

577
Greys vs Greens

டயலொக் SLC அழைப்பு T20 லீக் தொடரில் விளையாடிவரும் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலின் ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடரின் போட்டி அட்டவணையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அணியின் உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் உள்ள அனைவருக்கும்  கடந்த 17ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில், வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலின், சுமார் 12 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மல்கிரேவ் கிரிக்கெட் அணியில் இணையும் லஹிரு திரிமான்ன

எனவே, நேற்று (19) நடைபெற்ற போட்டிக்கு பின்னர், நான்கு அணி வீரர்களையும், மற்றுமொரு ஹோட்டலில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அத்துடன், இன்றைய தினம் வீரர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதுடன், குறித்த பரிசோதனையில் வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகாது என கிரிக்கெட் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது. காரணம், வீரர்களுக்கு தினமும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு உறுதியாகாவிடின் நாளைய தினத்துக்கான போட்டிகள், எதிர்வரும் 21ம் திகதிக்கு மாற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், 8 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கிரேய்ஸ் அணி நான்கு வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்றுள்ளதுடன், புளூஸ் மற்றும் ரெட்ஸ் அணிகள் தலா 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. கிரீன்ஸ் அணியானது, இதுவரையில் வெற்றியை பதிவுசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய போட்டி அட்டவணை

ஆகஸ்ட் 21

  • கிரீன்ஸ் எதிர் புளூஸ் – பி.ப. 02.30  
  • கிரேய்ஸ் எதிர் ரெட்ஸ் – இரவு 07.00 

ஆகஸ்ட் 22

  • கிரேய்ஸ் எதிர் புளூஸ் – பி.ப. 02.30
  • கிரீன்ஸ்  எதிர் ரெட்ஸ் – இரவு 07.00

ஆகஸ்ட் 24

  • இறுதிப் போட்டி – இரவு 07.00

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…