அவுஸ்திரேலிய கழக அணியில் இணையும் லஹிரு திரிமான்ன

121
 

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரரான லஹிரு திரிமான்னவினை அவுஸ்திரேலியாவின் உள்ளூர் கழகமான மல்கிரேவ் கிரிக்கெட் கழகம் அவர்கள் இந்தப் பருவகாலத்திற்காக ஒப்பந்தம் செய்திருக்கின்றது.

கமில், ஷானகவின் பிரகாசிப்புடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் கிரேய்ஸ்

அதன் மூலம் இலங்கை கிரிக்கெட் அணிக்காக 127 ஒருநாள், 42 டெஸ்ட் மற்றும் 26 T20 போட்டிகளில் ஆடியிருக்கும் லஹிரு திரிமான்ன, மல்கிரேவ் கிரிக்கெட் கழகத்திற்காக ஆடவிருக்கும் மூன்றாவது இலங்கை கிரிக்கெட் அணி வீரராக மாறியிருக்கின்றார்.  

மல்கிரேவ் கிரிக்கெட் கழகத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்களான திலகரட்ன டில்ஷான், உபுல் தரங்க ஆகியோர்  வீரர்களாக ஏற்கனவே இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஆப்கானிஸ்தானின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகும் அவிஷ்க குணவர்தன

அதேநேரம், இந்த அணியினுடைய தலைமைப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஜாம்பவான் சனத் ஜயசூரிய செயற்படுவதோடு, இலங்கையினைச் சேர்ந்த அனுஷ சமரநாயக்க உதவிப் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

மல்கிரேவ் கிரிக்கெட் கழக அணியானது அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்தியத்தில் தற்போது டிவிஷன்-3 போட்டிகளில் பங்கேற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…