DCL கிண்ண வாய்ப்பை அதிகரித்துக்கொண்ட புளூ ஸ்டார், டிபெண்டர்ஸ்

519

டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) தொடரின் 16 ஆவது வாரத்திற்கான தீர்க்கமான போட்டிகள் கடந்த இரண்டு தினங்களில் நடைபெற்றன. இதில் பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக 4-0 என வெற்றி பெற்ற புளூ ஸ்டார் அணி சம்பியன் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது. அதேவேளை, நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்து கழகத்தை 2-1 என வீழ்த்திய டிபெண்டர்ஸ் அணியும் கிண்ணத்திற்கான வாய்ப்பை அதிகரித்தது.

டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணம் யாருக்கு?

டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை யார் வெல்வார்கள் ….

புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் எதிர் பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம்  

டயலொக் சம்பியன்ஸ் லீக் புள்ளிப் பட்டியலில் 29 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்த புளூ ஸ்டார் அணி கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயம் என்ற சூழலிலேயே களமிறங்கியிருந்தது.

இபின்யி சிமன்சியின் இரட்டை கோல் மூலம் முன்னிலை பெற்ற புளூ ஸ்டார் அணி பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியை 4-0 என இலகுவாக வென்று சம்பியன் கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.

குருநாகலை புனித ஏன்ஸ் கல்லூரி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட புளூ ஸ்டார் நட்சத்திர வீரர் சிமன்சி 30ஆவது நிமிடத்தில் கோல் பெற்று அணியை முன்னிலை பெறச் செய்தார். இந்நிலையில் முதல் பாதியில் இரு அணிகளாலும் வேறு எந்த கோலையும் பெற முடியாமல் போனது.

முதல் பாதி: புளூ ஸ்டார் வி.க 1 – 0  பெலிகன்ஸ் வி.க

முதல் பாதி போலன்றி புளூ ஸ்டார் இரண்டாவது பாதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியதை காணமுடிந்தது. போட்டியின் 50 ஆவது நிமிடத்தில் சிமென்சி தனது அணிக்காக இரண்டாவது கோலையும் புகுத்தினார். இந்நிலையில் எம். சஹ்லான் 61 ஆவது நிமிடத்தில் புளூ ஸ்டாருக்கு மூன்றாவது கோலையும் புகுத்தி அந்த அணியை உறுதியான முன்னிலை பெற உதவினார்.

Photo Album : Colombo FC vs Defenders FC | Week 16 | Dialog Champions League 2018

தொடர்ந்து, அனுபவ வீரரான .பி. ஷன்ன 79 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலையும் புகுத்த புளூ ஸ்டார் தனது வெற்றியை உறுதி செய்துகொண்டது.

இந்த வெற்றியுடன் புளூ ஸ்டார் மொத்தம் 32 புள்ளிகளைப் பெற்று டயலொக் சம்பியன்ஸ் லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.  

புளூ ஸ்டார் இந்தப் பருவத்தில் கடைசி போட்டியாக சம்பியனாவதற்கு எதிர்பார்க்கும் மற்றொரு அணியான டிபெண்டர்ஸை எதிர்கொள்ளவுள்ளது. புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டிருக்கும் டிபெண்டர்ஸ் அணியுடனான இந்தப் போட்டி சம்பியன் அணியை தீர்மானிக்கும் போட்டியாக மாற அதிக வாய்ப்பு உள்ளது.

முழு நேரம்: புளூ ஸ்டார் வி.க 4 – 0  பெலிகன்ஸ் வி.க

கோல் பெற்றவர்கள்

புளூ ஸ்டார் இபின்யி சிமன்சி 30′, 58′, எம். சஹ்லான் 61′, .பி. ஷன்ன 79′

கொழும்பு கால்பந்து கழகம் எதிர் டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம்

கடைசி நிமிடங்களில் ஏற்பட்ட பரபரப்புகளுடன் நடப்புச் சம்பியனான கொழும்பு கால்பந்து கழகத்தை டிபெண்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி கொண்டு சம்பியன் பட்டத்தை வெள்ளும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.

பெத்தகான கால்பந்து வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் 29 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்த கொழும்பு அணி கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்வதற்கு 28 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் இருந்த டிபெண்டர்ஸ் அணியுடன் கடுமையாக போராடியது.  

ஜப்பானுக்கு அதிர்ச்சி கொடுத்து ஆசிய சம்பியனானது கட்டார்

ஆசிய கிண்ண கால்பந்து தொடரில் நான்கு முறை சம்பியனான …

இரு அணிகளும் பரஸ்பரம் ஆக்கிரமிப்புச் செலுத்தியதால் முதல் பாதி ஆட்டத்தில் எந்த கோலும் பெறப்படவில்லை.  

எனினும், போட்டியின் இரண்டாவது நிமிடத்தில் கொழும்பு அணியினருக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்தது. எனினும், அதனைப் பெற்ற டிமித்ரி கோலின் வலது பக்க கம்பத்திற்கு பந்தை அடித்து சிறந்த வாய்ப்பை வீணடித்தார்.

முதல் பாதி: டிபெண்டர்ஸ் கா.க 0 – 0 கொழும்பு கா.க

இரண்டாவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்திலும் இதே இழுபறி நிலை நீடித்தது. இரண்டாவது பாதியின் முதல் 20 நிமிடங்களிலும் எந்த கோலும் பெறப்படவில்லை. இந்நிலையில் 63 ஆவது நிமிடத்தில் பெறப்பட்ட கோணர் உதையின்போது மொஹமட் இஸ்ஸதீன் கோல் பெற்று படை அணியை முன்னிலை பெறச் செய்தார்.  

இந்நிலையில் டிமித்ரி 5 நிமிடங்கள் கழித்து கொழும்பு அணிக்காக பதில் கோல் திருப்ப போட்டியில் பரபரப்பு அதிகரித்தது. இரு அணிகளும் ஆக்கிரமிப்பு ஆட்டம் ஒன்றுக்கு திரும்பிய நிலையில் இரு தரப்பினரும் எதிரணியின் கோல் கம்பத்தை ஆக்கிரமிக்க முயன்றனர்.

இந்நிலையில் டிபெண்டர்ஸ் அணிக்காக மாற்று வீரராக களம் வந்த அனுபவ வீரர் பண்டார வரகாகொட 79 ஆவது நிமிடத்தில் ஹெடர் முறையில் அபார கோல் ஒன்றை போட்டார். இது அந்த அணியின் வெற்றி கோலாகவும் மாறியது.

Photo Album : Java Lane SC v New Youngs FC | Week 16 | Dialog Champions League 2018

இந்த வெற்றியுடன் டிபெண்டர்ஸ் அணி டயலொக் சம்பியன்ஸ் லீக் புள்ளிப் பட்டியலில் 31 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. இதன்படி 29 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்ட நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்து கழகம் இம்முறை பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

கொழும்பு அணி இந்தப் பருவத்தின் கடைசி போட்டியில் சீ ஹோக்ஸை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டியில் கொழும்பு வெற்றி பெற்றாலும் அந்த அணிக்கு கிண்ணத்தை வெல்ல முடியாது.

முதல் பாதி: டிபெண்டர்ஸ் கா.க 2 – 1 கொழும்பு கா.க

கோல் பெற்றவர்கள்

டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம் மொஹமட் இஸ்ஸதீன் 63′, பண்டார வரகாகொட 79

கொழும்பு கால்பந்து கழகம் பி. டிமித்ரி 69′

மாத்தறை சிட்டி விளையாட்டுக் கழகம் எதிர் நேவி சீ ஹோக்ஸ் கால்பந்து கழகம்

இம்முறை டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் மற்றொரு துரதிஷ்டமான நிகழ்வாக மாத்தறை சிட்டி கழகம் மற்றும் நேவி சீ ஹோக்ஸ் போட்டி கடைசி நிமிடத்தில் பார்வையாளர்களின் இடையூறால் கைவிடப்பட்டது.

எனினும் இது நேவி சீ ஹோக்ஸுக்கு சாதகமாக அமைந்தது. மாத்தறை கால்பந்து வளாகத்தில் நடைபெற்ற போட்டியின் முழு நேரம் முடிவுற்று வழங்கப்பட்ட உபாதையீடு நேரத்தின்போதே பார்வையாளர்கள் மைதானத்திற்குள் நுழைந்து இடையூறு செய்தனர். அப்போது மாத்தறை சிட்டி கழகம் போட்டியில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் மாத்தறை சிட்டி கழகத்துடனான போட்டியின் எஞ்சிய 3 நிமிடங்களும் இன்று (11) கொழும்பு பெத்தகான மைதானத்தில் இடம்பெற்றது. இதில் நேற்று முன்தினம் போட்டி நிறுத்தப்படும்போது நேவி வீரர்களுக்கு பெனால்டி ஒன்றுக்கான வாய்ப்பு கிடைத்தது. எனினும், இன்று போட்டி ஆரம்பமாகியபோது நேவி அணித் தலைவர் சதுரங்க சன்ஜீவ பெனால்டியை தவறவிட, போட்டி சமநிலையில் முடிவுற்றது.

தகுதியிழப்புக்கு எதிராக சுப்பர் சன் மேன்முறையீடு

சுகததாஸ அரங்கில் நடைபெற்ற ரினௌன் விளையாட்டுக் …

டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புக் கொண்ட கடற்படை அணிக்கு இந்தப் போட்டி தீர்க்கமானதாக இருந்தது. இந்தப் போட்டியில் களமிறங்கும்போதும் அந்த அணி 30 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது.

ரினௌன் விளையாட்டுக் கழகம் எதிர் கிறிஸ்டல் பெலஸ் கால்பந்துக் கழகம்

களனிய கால்பந்து வளாகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் 5-1 என்ற கோல் வித்தியாசத்தில் ரினௌன் அணி இலகு வெற்றியீட்டிக் கொண்டது. இந்த வெற்றியின் மூலம் ரினௌன் கழகத்தினால் 5 ஆவது இடத்திற்கு முன்னேற முடிந்தது.   

மொஹமட் முஜீப் ரினௌன் அணிக்காக 43 மற்றும் 59 ஆவது நிமிடங்களில் இரட்டை கோல் புகுத்தியதோடு இதனைத் தொடர்ந்து .ஜே ஒம்பேபே (66′) மற்றும் .. ஜமோஹ் (87′) அந்த அணிக்காக கோல் புகுத்தினர். கிறிஸ்டெல் பெலஸ் அணிக்காக 89 ஆவது நிமிடத்தில் இசாக் அபாவினால் ஆறுதல் கோல் ஒன்றை பெற முடிந்தது.

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் எதிர் நியூ யங்ஸ் கால்பந்து கழகம்

டயலொக் சம்பியன்ஸ் லீக் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருக்கும் ஜாவா லேன் அணி, நியூ யங்ஸ் கால்பந்து கழகத்திற்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிட்டி கால்பந்து வளாகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியின் 12 ஆவது நிமிடத்திலேயே நியூ யங்ஸ் கோல் பெற்றபோதும் ஜாவா லேனின் அபாம் அக்ரம் 44 ஆவது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியதோடு மொஹமட் நிஜிப்தீன் மற்றும் மொஹமட் சப்ரான் முறையே 75 மற்றும் 80 ஆவது நிமிடங்களில் கோல்கள் பெற்று அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதன்போது நியூ யங்ஸ் வீரர் மொஹமட் பௌஸான் 82 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை பெற்றபோதும் அது வெற்றிக்கு போதுமாக அமையவில்லை.  

சொலிட் கால்பந்துக் கழகம் எதிர் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்

அனுராதபுரம், சிறைச்சாலை மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் சோண்டர்ஸ் அணிக்கு எதிராக சொலிட் விளையாட்டுக் கழகம் 4-1 என்ற கோல் கணக்கில் இலகு வெற்றி ஒன்றை பெற்றது.

சொலிட் வீரர் எம்மானுவேல் இஹாம் 34 மற்றும் 45ஆவது நிமிடங்களில் இரட்டை கோல் புகுத்தியதோடு வின்சன் கீதன் 44 ஆவது நிமிடத்திலும் என்.சி. மைக்கல் மேலதிக நேரத்திலும் அந்த அணிக்காக கோல் பெற்றனர். சோண்டர்ஸ் அணி 14 ஆவது நிமிடத்தில் கோல் பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றிருந்தபோதும் அதனை தக்கவைத்துக் கொள்ள அந்த அணியால் முடியாமல்போனது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<