சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதி சுற்றுப் போட்டிகள் விபரம்

32
BeSoccer
@Be Soccer
 

இந்த பருவக்காலத்திற்கான சம்பியன்ஸ் லீக் தொடரின் பதினாறு அணிகள் சுற்றுப் போட்டிகள் கடந்த வாரம் நிறைவுக்கு வந்த நிலையில், காலிறுதி சுற்றுக்கான அணிகளை தெரிவு செய்யும் “குலுக்கல் முறை தெரிவு” இன்றைய (18) தினம் இடம்பெற்றது.

இந்த குலுக்கல் முறை தேர்வின் அடிப்படையில், நடப்பு சம்பியனான செல்சி அணி, 13 தடவைகள் சம்பியன்ஸ் லீக் வெற்றியாளர்களான ரியல் மட்ரிட்  அணியை ஒரு காலிறுதி போட்டியிலும், மற்றைய போட்டியில் மன்செஸ்டர் சிட்டி அணி அட்லெடிகோ மட்ரிட் அணியையும், மற்றும் அடுத்த இரண்டு காலிறுதி போட்டிகளில் முறையே லிவர்பூல் அணி போர்த்துக்கலை சேர்ந்த பெனிபிக்கா அணியையும், பேயர்ன் முனிச் அணி ஸ்பெயினை சேர்ந்த விலரேல் அணியையும் ஒன்றை ஒன்று எதிர்த்தாடுகின்றன.

இந்த காலிறுதி ஆட்டங்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதலாம் கட்ட காலிறுதி போட்டிகள் ஏப்ரல் மாதம் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளிலும்,  இரண்டாம் கட்ட காலிறுதி போட்டிகள் ஏப்ரல் மாதம் 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளன.

>> WATCH – MESSI, NEYMAR ஐ பார்த்து கூச்சலிட்ட PSG ரசிகர்கள் | FOOTBALL ULAGAM

ஏப்ரல் 6 ஆம் திகதி, லிவர்பூல் அணி மற்றும் பெனிபிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி , மற்றும் மன்செஸ்டர் சிட்டி அணி  எதிர் அட்லெடிகோ மட்ரிட் அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெறவுள்ளன.

தொடர்ந்து அடுத்த நாள் (7), விலரேல் அணி எதிர் பேயர்ன் முனிச் அணிகளுக்கு இடையிலான போட்டி, மற்றும் செல்சி அணி எதிர் ரியல் மட்ரிட் அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட போட்டிகளில்,  விலரேல்  எதிர் பேயர்ன் முனிச், மற்றும் செல்சி எதிர் ரியல் மட்ரிட் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளன. தொடர்ந்து அடுத்த நாள் (14) இறுதி இரண்டு காலிறுதி போட்டிகளும் நடைபெறும்.

>> அனைத்து ரஷ்ய அணிகளுக்கும் தடை விதித்த FIFA மற்றும் UEFA

காலிறுதி போட்டிகள் நிறைவு பெற்றவுடன், இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள அரையிறுதி போட்டிகள் அதே மாதம் 26 ஆம் மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறும். தொடர்ந்து இரண்டாவது கட்ட அரையிறுதி போட்டிகள் மே மாதம் 3 ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் நடைபெறும்.

தொடர்ந்து இந்த பருவக்கால சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டி பாரிஸ் அரங்கில் மே மாதம் 28 ஆம் திகதி நடைபெறும்.

இவ்வனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் இலங்கை நேரப்படி அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் ஐரோப்பா லீக்கின் காலிறுதி போட்டிகளில் வெஸ்ட் ஹாம் அணி லியொன் அணியையும், ரேஞ்சர்ஸ் அணி ப்ரக அணியையும், பார்சிலோனா அணி பிராங்பேர்ட் அணியையும் மற்றும் அட்லாண்டா அணி லைப்சிக் அணியையும் சந்திக்கவுள்ளன

சம்பியன்ஸ் லீக் போட்டி அட்டவணை

முதலாம் கட்ட காலிறுதி போட்டிகள்

  • பெனிபிக்கா எதிர் லிவர்பூல் – ஏப்ரல் 6
  • மன்செஸ்டர் சிட்டி  எதிர் அட்லெடிகோ மட்ரிட் – ஏப்ரல் 6
  • விலரேல்  எதிர் பேயர்ன் – ஏப்ரல் 7
  • செல்சி  எதிர் ரியல் மட்ரிட் – ஏப்ரல் 7

இரண்டாம் கட்ட காலிறுதி போட்டிகள்

  • விலரேல்  எதிர் பேயர்ன் – ஏப்ரல் 13
  • செல்சி  எதிர் ரியல் மட்ரிட் – ஏப்ரல் 13
  • பெனிபிக்கா எதிர் லிவர்பூல் – ஏப்ரல் 14
  • மன்செஸ்டர் சிட்டி  எதிர் அட்லெடிகோ மட்ரிட் – ஏப்ரல் 14

                                 >> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<