டயலொக் கடற்கரை கால்பந்து: நாளை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்

176

இலங்கையின் கால்பந்து விளையாட்டுக்கு புதுப்பொழிவைக் கொடுக்கும் வகையில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் நடைபெறவுள்ள டயலொக் கடற்கரை கால்பந்து தொடரின் முதலாவது அத்தியாயம் நாளை (03) ஹம்பாந்தோட்டை Golden Beahes  கடற்கரையில் ஆரம்பமாகவுள்ளது.

நாடுபூராகவும் கடற்கரை கால்பந்து விளையாட்டை வியாபிக்கவும், திறமையான வீரர்களை இனங்காணும் நோக்கிலும் டயலொக் கடற்கரை கால்பந்து போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

நான்கு அத்தியாயங்களைக் கொண்டதாக நடைபெறவுள்ள இதன் எஞ்சிய போட்டிகள் வல்வட்டித்துறை, கல்முனை மற்றும் நீர்கொழும்பு ஆகிய கடற்கரைகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

இதன்படி, ஹம்பாந்தோட்டையில் நாளை ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டித் தொடரில் ஹம்பாந்தோட்டை கிங்ஸ், ஹம்பாந்தோட்டை ஹோனெட்ஸ், மாத்தறை மேரியன்ஸ், மாத்தறை ஈகல்ஸ், கோல் ஸ்டெலியன்ஸ், கோல் ஜயன்டிஸ், அம்பலாங்கொட டைடன்ஸ், அம்பலாங்கொட எவென்ஜர்ஸ், பேரூவளை ப்ளூஸ், பேருவளை லயன்ஸ், களுத்துறை ரோயல்ஸ், மற்றும் களுத்துறை நைட்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

வெற்றியுடன் முன் பருவத்தை முடித்த கொழும்பு, ப்ளூ ஸ்டார் அணிகள்

இதனிடையே, இந்தப் போட்டித் தொடரின் பிரதான அனுசரணையாளரக இணைந்து கொண்டமை தொடர்பில் டயலொக் ஆசியாட்ட நிறுவனத்தின் வர்த்தக மற்றும் ஊடகப் பிரிவின் சிரேஷ் பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க கருத்து தெரிவிக்கையில்

உலகின் மிகவும் பிரபல்யமான விளையாட்டுக்களில் ஒன்றான கால்பந்து விளையாட்டை இலங்கையை சுற்றியுள்ள கடற்கரைகளில் நடாத்துவதன் மூலம் திறமையான வீரர்களை இனங்கண்டு கொள்வதற்கான வாய்ப்பு கிடைப்பதாக அவர் தெரிவித்தார்

முன்னதாக குறித்த போட்டிகளை கடந்த வருடம் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிற்போடுவதற்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, டயலொக் கடற்கரை கால்பந்து போட்டித் தொடர் ஊடகங்களை nதிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா மற்றும் இலங்கை கடற்கரை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் மொஹமட் ரமேஷ; உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…