உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் விஜய் சங்கர்

315
©Getty Images

கால் விரல் உபாதைக்கு ஆளாகிய இந்திய அணியின் சகலதுறை வீரர்களில் ஒருவரான விஜய் சங்கர் 2019ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறியிருக்கின்றார்.  

இதேநேரம், விஜய் சங்கருக்கு பதிலாக இந்திய அணியின் உலகக் கிண்ண வீரர்கள் குழாத்தில் மயான்க் அகர்வாலிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவை வீழ்த்தி உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை அதிகரித்த இங்கிலாந்து

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 38……

விஜய் சங்கர், தனது உபாதையின் காரணமாக இந்திய அணி விளையாடிய அவர்களின் 7ஆவது உலகக் கிண்ண லீக் போட்டியிலும் பங்கெடுக்காமல் போயிருந்தார். 

விஜய் சங்கரின் உபாதை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது. 

“விஜய் சங்கருக்கு இடதுகால் பெருவிரலில் உபாதை ஒன்று ஏற்பட்டிருக்கின்றது. இந்த உபாதை குணமாக குறைந்தது மூன்று வாரங்களாவது எடுக்கும். இந்த உபாதை விஜய் சங்கருக்கு தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பினையும் இல்லாமல் செய்திருக்கின்றது.”

விஜய் சங்கருக்கு பதிலாக இந்திய உலகக் கிண்ண குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கும் 26 வயதான மயான்க் அகர்வால், இதுவரையில் சர்வதேச ஒருநாள் போட்டிகள் எதிலும் ஆடாத வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணிக்காக இதுவரையில் 3 உலகக் கிண்ண போட்டிகளில் ஆடியுள்ள விஜய் சங்கர், 58 ஓட்டங்கள் குவித்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை

இதேநேரம், விஜய் சங்கர் இல்லாத நிலையில் இந்திய அணிக்கு, இன்னும் 2 உலகக் கிண்ண லீக் போட்டிகள் எஞ்சியிருக்கின்றது. இதில் தமது அடுத்த லீக் போட்டியில் செவ்வாய்க்கிழமை (2) பங்களாதேஷ் அணியினையும், சனிக்கிழமை (6) இலங்கை அணியினையும் எதிர்கொள்கின்றது. 

இதேவேளை, தற்போது 11 புள்ளிகளுடன் உலகக் கிண்ண அணிகள் நிரல்படுத்தலில் 2ஆம் இடத்தில் உள்ள இந்திய அணி, தமது உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இன்னும் ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்றால் போதுமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<