கிரிக்கெட் விளையாட்டுக்கு மீளும் குமார் சங்கக்கார

94

இலங்கையின் கிரிக்கெட் காதலர்களுக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்திருக்கின்றது. 

கடந்த பருவகாலத்திற்கான இங்கிலாந்தின் உள்ளூர் கவுண்டி தொடரில் சம்பியன் பட்டம் வென்ற எசெக்ஸ் கிரிக்கெட் கழகம், கிரிக்கெட் விளையாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்துடன் (MCC) சம்பிரதாய கிரிக்கெட் போட்டியொன்றில் விளையாடவுள்ளது. 

சச்சின், சேவாக்குடன் சாதனைப் பட்டியலில் இணந்த ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க…..

நான்கு நாட்கள் கொண்ட இந்த சம்பிரதாய கிரிக்கெட் போட்டி, இலங்கையின் காலி சர்வதேச மைதானத்தில் மார்ச் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தற்போதைய தலைவராக செயற்படும் குமார் சங்கக்கார இப்போட்டியிலும் மெர்லிபோன் கிரிக்கெட் கழக அணியினை வழிநடாத்தும் தலைவராக எசெக்ஸ் அணியினை எதிர்த்து விளையாடவிருக்கின்றார். 

அதன்படி, மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியின் மூலமே, இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு குமார் சங்கக்கார மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.

இந்தப் போட்டி பற்றி இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமையகத்தில் வைத்து கருத்து வெளியிட்டிருந்த குமார் சங்கக்கார இது வெறும் கண்காட்சிப் போட்டியாக இருக்காது எனத் தெரிவித்து எசெக்ஸ் அணியினை தனது தரப்பு தோற்கடிக்க ஆவலுடன் இருக்கின்றது என கூறினார்.

இதேநேரம், இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளமாட்டார் எனவும் தெரிவித்திருந்த குமார் சங்கக்கார தனக்கு 7 ஆவது இலக்கத்தில் துடுப்பாட விருப்பம் இருப்பதாகவும் கூறியிருந்தார். 

அத்தோடு, இப்போட்டிக்கான மெர்லிபோன் கிரிக்கெட் கழக அணி இன்னும் தீர்மானிக்கப்படுவதாக குறிப்பிட்ட குமார் சங்கக்கார, தனது அணியில் மூன்று அல்லது நான்கு இலங்கை வீரர்கள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

குமார் சங்கக்காரவின் கூற்றுக்கு அமைவாக மெர்லிபோன் கிரிக்கெட் கழக அணியில் இலங்கையின் முன்னாள் வீரர்கள் சிலர் இணைய எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், குறிப்பிட்ட போட்டி நடைபெறும் காலத்தில் இலங்கை அணியின் மற்றைய நட்சத்திர துடுப்பாட்ட வீரரான மஹேல ஜயவர்தன பயிற்சி நடவடிக்கைகளில் இருப்பார் என்பதால் அவர் இந்த சம்பிரதாய போட்டியில் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகின்றது.

நியூசிலாந்துக்கு அதிர்ச்சித் தோல்வியை வழங்கிய இந்திய அணி

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து….

குமார் சங்கக்காரவின் மெர்லிபோன் கிரிக்கெட் கழக அணி, இலங்கையில் சம்பிரதாய கிரிக்கெட் போட்டியில் விளையாட முன்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவிருப்பதோடு, இப்போட்டிக்கான மெர்லிபோன் கிரிக்கெட் கழக அணியும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

மெர்லிபோன் கிரிக்கெட் கழக அணி (பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான) 

குமார் சங்கக்கார (அணித் தலைவர்), ரவி போபரா, மைக்கல் பர்கஸ், ஒலிவர் ஹன்னோன்-டெல்பி, ப்ரெட் கிளாஸ்ஸன், மைக்கல் லீஸ்க், ஆரோன் லில்லி, இம்ரான் கையும், வில் ரோட்ஸ், சபியான் சரிப், ரியலோப் வன் டர் மேர்வே, ரோஸ் விட்லி  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<