இலங்கை கால்பந்து அணியின் உதவி பயிற்சியாளராக ஜானக்க சில்வா

246

இலங்கை தேசிய கால்பந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக நேவி சீ ஹொக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உதவிப் பயிற்சியாளர் ஜானக்க சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.  

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்கான உத்தேச இலங்கைக் குழாம்

கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து ………..

இலங்கை தேசிய அணி விளையாடும் இரண்டு கட்டங்களைக் கொண்ட பிஃபா உலகக் கிண்ணத்திற்கான பூர்வாங்க தகுதிகாண் போட்டிகளுக்காகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மகாவு அணியுடனான இரண்டு கட்டங்களைக் கொண்ட இந்த தகுதிகாண் போட்டிகளுக்குப் பின், டிசெம்பர் மாதம் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வரை அவரது ஒப்பந்தம் நீடிக்கப்படலாம் என இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜஸ்வர் உமர் குறிப்பிட்டார்.

ThePapare.com இற்கு அளித்த பிரத்தியேக பேட்டியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தமக்கு உதவியாக ஒரு பயிற்சியாளர் இருப்பதை தலைமை பயிற்சியாளர் நிசாம் பக்கீர் அலி விரும்புகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

ஜானக்க சில்வா இலங்கை தேசிய அணிக்காக 2000 தொடக்கம் 2008 ஆம் ஆண்டுவரை 8 ஆண்டுகள் ஆடியுள்ள முன்னாள் வீரராவார்.

வத்தளை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவரான ஜானக்க 1995 தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை ‘A’ டிவிசன் கால்பந்து போட்டிகளில் ஓல்ட் பென்ஸ் விளையாட்டுக் கழகம், பெட்டா யுனைடெட் விளையாட்டுக் கழகம் மற்றும் கடற்படை விளையாட்டுக் கழகம்  ஆகிய அணிகளுக்காக ஆடியுள்ளார். அதேபோன்று, மாலைதீவில் தொழில்முறை கால்பந்து போட்டிகளிலும் அவர் ஆடியுள்ளார்.

Photo Album : Navy Sea Hawks FC v Colombo FC | Week 17 | Dialog Champions League 2018

மேலும், கால்பந்து பயிற்றுவிப்பாளர்களுக்கான B தர அனுமதிப் பத்திரத்தைக் கொண்டுள்ள ஜானக்க, கடந்த பருவகாலத்தில் நேவி சீ ஹொக்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் தமாதரன் சந்திரசிறி இல்லாத நேரங்களில் அவ்வணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார். இவரது பயிற்றுவிப்பின் கீழ் அவ்வணி விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகாவு அணிக்கு எதிரான, உலகக் கிண்ண தொடருக்கான பூர்வாங்க தகுதிகாண் போட்டிக்காக இலங்கை அணி ஒருமாத தயார்படுத்தலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<