நியூசிலாந்துக்கு அதிர்ச்சித் தோல்வியை வழங்கிய இந்திய அணி

49
ICC

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான மூன்றாவது T20I போட்டியில் சுப்பர் ஓவரின் மூலம் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்றது. இதன்படி, 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியுள்ளது.

ராகுல் – ஐயர் ஜோடியின் சிறப்பான துடுப்பாட்டத்துடன் அடுத்த வெற்றியை சுவைத்த இந்தியா

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் கே.எல் …

ஹெமில்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியது.

நியூசிலாந்து அணியின் பணிப்பின் படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. ஒரு கட்டத்தில் 200 ஓட்டங்களை பெறக்கூடிய நிலையில் இந்திய அணி இருந்த போதும், மத்தியவரிசை வீரர்கள் தடுமாறியதன் காரணமாக, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த ரோஹித் சர்மா இந்த தொடரில் தன்னுடைய முதல் அரைச் சதத்தை பதிவுசெய்தார். வேகமாக துடுப்பெடுத்தாடிய இவர், 40 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, விராட் கோஹ்லி 38 ஓட்டங்களையும், கே.எல். ராஹுல் 27 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, ஹெமிஸ் பென்னட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், மிச்சல் சென்ட்னர் மற்றும் கொலின் டி கிரெண்டோம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சனின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன், வெற்றியிலக்கை நெருங்கிய போதும், இறுதிக் கட்டத்தில் ஓட்டங்களை பெறத் தவறியதால் 179/6 ஓட்டங்களை பெற்று போட்டியை சமப்படுத்தியது. 

இதில், இறுதி ஓவருக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், மொஹமட் சமி சிறப்பாக பந்துவீசி 8 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்ததுடன், இறுதிப் பந்தில் ரொஸ் டெய்லரை வீழ்த்தி அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தில் சுப்பர் ஓவர் வழங்கப்பட, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 17 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவால் கடைசி இரண்டு பந்துகளில் விளாசப்பட்ட சிக்ஸர்களால் வெற்றியை சுவீகரித்தது.

நியூசிலாந்து அணி சார்பில் கேன் வில்லியம்ஸன் 95 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, மார்டின் கப்டில் 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்திய அணி சார்பில் மொஹமட் சமி மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்படி, ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் இந்திய அணி 3 வெற்றிகளுடன், 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது. இதேவேளை, இரண்டு அணிகளுக்கும் இடையிலான நான்காவது போட்டி எதிர்வரும் 31ம் திகதி வெலிங்டனில் நடைபெறவுள்ளது.

சுருக்கம்

இந்தியா – 179/5 (20), ரோஹித் சர்மா 65, விராட் கோஹ்லி 38, கே.எல்.ராஹுல் 27, ஹெமிஸ் பென்னட் 3/54

நியூசிலாந்து – 179/6 (20), கேன் வில்லியம்சன் 95, மார்டின் கப்டில் 31, சர்துல் தாகூர் 2/21, மொஹமட் சமி 2/32

முடிவு – நியூசிலாந்து அணி சுப்பர் ஓவர் அடிப்படையில் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<