சுற்றுலா நியூசிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநிறைவில் இலங்கை அணியானது தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரது சிறப்பாட்டத்தோடு வலுப் பெற்றிருக்கின்றது.
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. இப்போட்டிக்கான இலங்கை அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது. மிலான் ரத்நாயக்க மற்றும் அறிமுக சுழல்வீரர் நிஷான் பீரிஸ் ஆகியோர் ரமேஷ் மெண்டிஸ், லஹிரு குமார ஆகியோரின் பிரதியீடாக இணைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கை குழாம்
திமுத் கருணாரட்ன, பெதும் நிஸ்ஸங்க, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ், நிஷான் பீரிஸ், மிலான் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய, அசித பெர்னாண்டோ
>> இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை பதினொருவர் அறிவிப்பு
பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த இலங்கை அணி தொடக்கத்தில் பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட்டினை அவர் வெறும் ஒரு ஓட்டத்தைப் பெற்ற நிலையில் பறிகொடுத்தது. எனினும் புதிய வீரராக வந்த தினேஷ் சந்திமால், களத்தில் இருந்த ஆரம்ப வீரரான திமுத் கருணாரட்னவுடன் இணைந்து இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கினார்.
இந்த இணைப்பாட்டம் முதல் நாளின் மதிய போசண இடைவெளியினைத் தாண்டி நீடித்தது. இரண்டு வீரர்களும் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 122 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில் திமுத் கருணாரட்ன 46 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் தினேஷ் சந்திமால் அரைச்சதம் விளாசி இலங்கைத் தரப்பினை பலப்படுத்தினார்.
>> சதங்களை விளாசி நுவனிது, நிபுன் மற்றும் லசித் குரூஸ்புள்ளே
தினேஷ் சந்திமாலுக்கு அஞ்செலோ மெதிவ்ஸ் கைகொடுத்ததோடு முதல் நாளின் தேநீர் இடைவெளியினை அடுத்து தினேஷ் சந்திமால் டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 16ஆவது டெஸ்ட் சதத்தினைப் பூர்த்தி செய்தார். தினேஷ் சந்திமாலின் சதத்தோடு இலங்கை அணியானது வலுவான நிலையினை அடுத்தது.
பின்னர் முதல் நாள் போட்டியின் மூன்றாம் இடைவெளியில் தினேஷ் சந்திமால் தனது விக்கெட்டினை கிளன் பிலிப்ஸின் பந்துவீச்சில் பறிகொடுத்தார். சந்திமால் ஆட்டமிழக்கும் போது 15 பெளண்டரிகள் அடங்கலாக 116 ஓட்டங்கள் பெற்றார்.
சந்திமாலினை அடுத்து அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் அரைச்சதங்கள் பெற்று இலங்கைத் தரப்பினை வலுப்படுத்தினர். இவர்கள் இருவரினதும் அரைச்சத உதவியோடு இலங்கை அணியானது முதல் நாள் ஆட்டநிறைவில் 90 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் அஞ்செலோ மெதிவ்ஸ் 78 ஓட்டங்கள் பெற்றிருக்க, கமிந்து மெண்டிஸ் 51 ஓட்டங்கள் பெற்றிருக்கின்றார். இப்போட்டியில் கமிந்து மெண்டிஸ் அரைச்சதம் பெற்றதன் மூலம் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் தன்னுடைய முதல் 8 போட்டிகளிலும் 50 இற்கு அதிகமான ஓட்டங்கள் பெற்ற முதல் வீரராக சாதனை நிலை நாட்டினார். நியூசிலாந்து பந்துவீச்சில் டிம் சௌதி மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தனர்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Tom Blundell b Tim Southee | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Dimuth Karunaratne | run out (Tom Latham) | 46 | 109 | 4 | 0 | 42.20 |
Dinesh Chandimal | b Glenn Phillips | 116 | 208 | 15 | 0 | 55.77 |
Angelo Mathews | c William O’Rourke b Glenn Phillips | 88 | 185 | 7 | 0 | 47.57 |
Kamindu Mendis | not out | 182 | 250 | 16 | 4 | 72.80 |
Dhananjaya de Silva | c Tom Blundell b Glenn Phillips | 44 | 80 | 3 | 1 | 55.00 |
Kusal Mendis | not out | 106 | 149 | 6 | 3 | 71.14 |
Extras | 19 (b 6 , lb 8 , nb 2, w 3, pen 0) |
Total | 602/5 (163.4 Overs, RR: 3.68) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tim Southee | 19 | 1 | 70 | 1 | 3.68 | |
William O’Rourke | 17 | 1 | 81 | 0 | 4.76 | |
Ajaz Patel | 41 | 5 | 135 | 0 | 3.29 | |
Mitchell Santner | 33 | 5 | 82 | 0 | 2.48 | |
Glenn Phillips | 38 | 4 | 141 | 3 | 3.71 | |
Rachin Ravindra | 12.4 | 0 | 54 | 0 | 4.35 | |
Daryl Mitchell | 3 | 0 | 25 | 0 | 8.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tom Latham | c Pathum Nissanka b Asitha Fernando | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Devon Conway | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 9 | 21 | 0 | 0 | 42.86 |
Kane Williamson | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 7 | 53 | 0 | 0 | 13.21 |
Ajaz Patel | lbw b Nishan Peiris | 8 | 41 | 0 | 0 | 19.51 |
Rachin Ravindra | b Nishan Peiris | 10 | 25 | 1 | 0 | 40.00 |
Daryl Mitchell | c Angelo Mathews b Prabath Jayasuriya | 13 | 15 | 1 | 1 | 86.67 |
Tom Blundell | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Glenn Phillips | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Mitchell Santner | b Nishan Peiris | 29 | 51 | 4 | 1 | 56.86 |
Tim Southee | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 2 | 6 | 0 | 0 | 33.33 |
William O’Rourke | not out | 2 | 15 | 0 | 0 | 13.33 |
Extras | 5 (b 5 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 88/10 (39.5 Overs, RR: 2.21) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 4 | 1 | 8 | 1 | 2.00 | |
Nishan Madushka | 17.5 | 3 | 33 | 3 | 1.89 | |
Prabath Jayasuriya | 18 | 6 | 42 | 6 | 2.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tom Latham | c Pathum Nissanka b Nishan Peiris | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Devon Conway | c Dinesh Chandimal b Dhananjaya de Silva | 61 | 62 | 10 | 1 | 98.39 |
Kane Williamson | c Ramesh Mendis b Nishan Peiris | 46 | 58 | 4 | 0 | 79.31 |
Rachin Ravindra | b Nishan Peiris | 12 | 24 | 1 | 0 | 50.00 |
Daryl Mitchell | c Pathum Nissanka b Prabath Jayasuriya | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Tom Blundell | lbw b Nishan Peiris | 60 | 64 | 6 | 2 | 93.75 |
Glenn Phillips | c Dimuth Karunaratne b Nishan Peiris | 78 | 99 | 6 | 3 | 78.79 |
Mitchell Santner | st Kusal Mendis b Nishan Peiris | 67 | 115 | 6 | 3 | 58.26 |
Tim Southee | b Prabath Jayasuriya | 10 | 10 | 1 | 1 | 100.00 |
Ajaz Patel | b Prabath Jayasuriya | 22 | 40 | 3 | 1 | 55.00 |
William O’Rourke | not out | 0 | 7 | 0 | 0 | 0.00 |
Extras | 3 (b 0 , lb 2 , nb 0, w 1, pen 0) |
Total | 360/10 (81.4 Overs, RR: 4.41) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nishan Peiris | 33.4 | 4 | 170 | 6 | 5.09 | |
Prabath Jayasuriya | 34 | 2 | 139 | 3 | 4.09 | |
Asitha Fernando | 5 | 1 | 14 | 0 | 2.80 | |
Milan Rathnayake | 2 | 0 | 7 | 0 | 3.50 | |
Dhananjaya de Silva | 7 | 0 | 28 | 1 | 4.00 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<