கொரோனாவுக்காக உலகக் கிண்ண ஜேர்ஸியை ஏலம் விட்ட ஜோஸ் பட்லர்

72

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் கடந்த வருடம் உலகக் கிண்ணம் வென்ற இறுதிப் போட்டியில் தான் அணிந்திருந்த ஜேர்ஸியை ஏலத்தில் விட்டுள்ளார்.   

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பணிகளுக்காக பிரபலங்கள் பலரும் நிதி உதவி செய்து வருகின்றனர்

கொரோனா தன்னார்வ பணியாளராக மாறிய இங்கிலாந்து வீராங்கனை

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்…..

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து அணி, நியூஸிலாந்து அணியை சுப்பர் ஓவரில் வீழ்த்தி ஒருநாள் உலகக் கிண்ணத்தை கடந்த வருடம் கைப்பற்றியது

இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய பட்லர், 59 ஓட்டங்களை எடுத்திருந்ததுடன், சுப்பர் ஓவரில் மார்டின் கப்டிலை ரன்அவுட் செய்து அசத்தினார். 

இந்நிலையில், இங்கிலாந்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்காக தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கான நிதி திரட்டும் நடவடிக்கையில் இங்கிலாந்து விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லர் களமிறங்கியுள்ளார்.

இதன்படி, கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தான் அணிந்த ஜேர்ஸியை ஏலம் விடப் போவதாக அறிவித்துள்ளார்

இந்த ஜேர்ஸியில் உலகக் கிண்ணத்தில் விளையாடிய அனைத்து இங்கிலாந்து வீரர்களும் கையெழுத்திட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

இதுகுறித்து பட்லர் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், தற்போதைய நிலையில் இங்கிலாந்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் சேர்ந்த வைத்தியர்கள், செவிலியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு மக்களைக் காப்பாற்ற போராடி வருகின்றனர். அவர்களுக்கு நம்மால் முடிந்த வரை உதவிகள் செய்ய வேண்டும் என்றார்.  

மேலும், தன்னுடைய ஜேர்ஸியை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் நிதியை ரோயல் பிராம்ப்டன், ஹர்பீல்ட் மருத்துவமனைகள் அறக்கட்டளைக்கு வழங்கப்படும்

37 வயதானாலும் கிரிக்கெட் விளையாடத் தயார்: ஜேம்ஸ் அண்டர்சன்

கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும்…..

அந்த நிதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் பாதுகாப்பு கருவிகள் வாங்க பயன்படுத்தப்படும் என்று பட்லர் கூறியுள்ளார்

அவரது இந்த அறிவிப்புக்கு பிறகு நேற்று வரை 150 பேர் ஜேர்ஸியை ஏலம் எடுக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளனர். அவர்களில் ஒருவர் அதிகபட்சமாக 65ஆயிரம் பவுண்ட்ஸ் வரை ஏலம் கேட்டுள்ளார்.  

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவை, மறுபதிவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கிரிக்கெட் வீரர்கள் விராட் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித், சுரேஷ் ரெய்னா ஆகியோரை ஜோஸ் பட்லர் கேட்டுக் கொண்டுள்ளார்

இதுஇவ்வாறிருக்க, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் சபை 61 மில்லியன் பவுண்களை நிதியுதவியாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<