கொரோனா தன்னார்வ பணியாளராக மாறிய இங்கிலாந்து வீராங்கனை

41
Heather Knights
ICC
 

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி ஹேதர் நைட், தேசிய சுகாதார சேவையகத்தின் தன்னார்வ பணியாளர்களில் ஒருவராக இணைந்துக்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியவர்களுக்கு உதவுவதற்காக தேசிய சுகாதார சேவையகத்தின் ஊடாக, 2 இலட்சத்துக்கு 50 ஆயிரம் தன்னார்வ பணியாளர்கள் தேவை என அறிவிக்கப்பட்டிருந்தது. 

யுத்தம் முதல் கொரோனா வைரஸ் வரை கிரிக்கெட் உலகை உலுக்கிய சம்பவங்கள்

கொவிட் -19 என்ற கொரோனா வைரஸ் தொற்று பீதியால் உலகளவில்

அதன் அடிப்படையில், வெளியிடப்பட்டிருந்த அறிவித்தலின் படி, 7 இலட்சத்துக்கும் அதிகமானோர் தன்னார்வ பணியாளர்களாக இணைந்துக்கொள்வதற்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களுடன் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியான ஹேதர் நைட்டும் விண்ணப்பித்திருந்தார்.

இவர்கள், கொரோனா தொற்றாளர்களுக்கு உதவுவது, வைத்தியர்கள் மற்றும் தொற்றாளர்களுடன் இணைப்புகளை ஏற்படுத்துவது, தொற்றாளர்களை அழைத்துச் செல்வது மற்றும் அவர்களுக்கான மருந்துகளை வினியோகிப்பது உட்பட தேவையான பல சேவைகளில் ஈடுபடவுள்ளனர்.

மகளிருக்கான T20I  உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியாவில் நிறைவடைந்த பின்னர், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக ஹேதர் நைட் இங்கிலாந்தினை சென்றடைந்திருந்தார். இந்தநிலையில், தனதுக்கு அதிகமான ஓய்வு நேரங்கள் இருப்பதாகவும், அதனால்,  நோயாளர்களுக்கு உதவுவதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாகவும் ஹேதர் நைட் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் எந்த அணி சாதிக்கும்?

சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் விளையாட்டில் போட்டித் தன்மையினை அதிகரிக்க ஐ.சி.சி

“எனக்கு அதிகமான ஓய்வு நேரங்கள் இருக்கிறது. அதனால், என்னால் முடிந்த உதவிகளை ஏனையோருக்கு வழங்க முடியும். எனது சகோதரர் மற்றும் பெற்றோர்கள் வைத்திய சேவையில் ஈடுபடுகின்றனர். அதேநேரம், எனது நண்பர்கள் சிலரும் தேசிய சுகாதார சேவையகத்தில் பணிபுறிகின்றனர். அவர்கள் எவ்வளவு சிரமத்துக்கு மத்தியில் பணிபுறிகின்றனர் என்பதை நன்கு அறிவேன். 

எனவே, இப்போது நான் எனது வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியில் செல்ல நினைத்துள்ளேன். அதன் மூலம் நோயாளர்களுக்கான மருந்துகளை வழங்க முடியும். அதுமாத்திரிமின்றி சுய தனிமையில் உள்ளவர்களை நேரடியாக சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடுவேன். தனிமையில் இருக்கும் அவர்களுடன் கலந்துரையாடும் போது அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்க முடியும்” என்றார்.

ஹேதர் நைட் இங்கிலாந்து மகளிர் அணிக்காக 7 டெஸ்ட் போட்கள், 101 ஒருநாள் போட்டிகள் மற்றும் 74 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க