மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இலங்கை அணி வீரர்கள்

160

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படு வருகின்ற ”கிரிக்கெட் எய்ட்” சமூகசேவை உதவித் திட்டத்தின் கீழ் மஹகரமையில் உள்ள அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கு ஒரு மில்லியன் ரூபா நிதி உதவி கையளிக்கப்பட்டது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பராமரித்து வருகின்ற இலங்கையின் ஒரேயொரு புற்றுநோய் வைத்தியசாலையான மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு இலங்கை கிரிக்கெட்டின்கிரிக்கெட் எய்ட்” குழுவினர் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று (17) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.  

Photos : CSR Project by Sri Lanka Cricket at the Apeksha Cancer Hospital Maharagama

ThePapare.com | Viraj Kothalawala| 17/07/2018..

விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் வேண்டுகோளுக்கு இணங்க கிரிக்கெட் எய்ட் உதவித் திட்டத்தின் ஊடாக சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியவசியப் பொருட்கள் உள்ளிட்டவை அபேக்ஷா வைத்தியசாலையின் உதவிப் பணிப்பாளர் டாக்டர் புத்திக குருகுலசூரியவிடம் இதன்போது கையளிக்கப்பட்டன.  

அத்துடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, கிரிக்கெட் எய்ட் சமூகசேவை உதவித் திட்டத்தின் பிரதானி உபாலி செனவிரத்ன உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

இதேநேரம், தற்போது நடைபெற்றுவருகின்ற இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் அங்குள்ள நோயாளர்கள் மற்றும் குழந்தைகளை நேரடியாக பார்வையிட்டு அவர்களின் சுக துக்கங்களை விசாரித்தனர்.  

சந்திமால், ஹதுருசிங்க, குருசிங்க ஆகியோருக்கு 2 டெஸ்ட், 4 ஒரு நாள் போட்டிகளில் தடை

கடந்த மாதம் 14 ஆம் திகதி சென். லூசியாவில் ஆரம்பமான..

2004 ஆம் ஆண்டு இலங்கையைத் தாக்கிய சுனாமி பேரலையின் பின்னர் இலங்கை கிரிக்கெட் சபையின் அப்போதைய தலைவர் திலங்க சுமதிபாலவின் எண்ணக்கரு மூலம் உருவாக்கப்பட்டகிரிக்கெட் உதவி‘ (Cricket Aid) என்னும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாகவே இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது, அத்தோடு, இத்திட்டம் மூலம் நாட்டில் இடம்பெறுகின்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த சில வருடங்களாக இவ்வாறு பல உதவிகளை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கி வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

>> கிரிக்கெட் காணொளிகளைப் பார்வையிட <<