IPL ஏலத்தில் இடம்பிடித்துள்ள 23 இலங்கை வீரர்கள்!

Indian Premier League 2022

1846
23 Sri Lankans included for IPL Mega Auction 2022

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணியைச் சேர்ந்த 23 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்துக்காக இலங்கை அணியைச்சேர்ந்த 36 வீரர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்தநிலையில், ஏலத்தில் இடம்பெற்றுள்ள வீரர்கள் தொடர்பிலான பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகம் இன்று (01) அறிவித்துள்ளது.

>> IPL ஏலத்துக்கு 36 இலங்கை வீரர்கள் பதிவு

குறித்த இந்த பட்டியலில் இலங்கை அணியைச்சேர்ந்த முன்னணி 23 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். வனிந்து ஹஸரங்க, துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷன உட்பட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன், இலங்கை கிரிக்கெட்டின் தடையிலிருந்து மீண்டுள்ள நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

இதேவேளை, ஐசிசி இளையோர் உலகக்கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட துனித் வெல்லாலகே, இம்முறை ஐ.பி.எல். ஏலத்துக்கான வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். இவருடன் புதுமுக வீரர்களான கெவின் கொத்திகொட, மதீஷ பதிரண, நுவான் துஷார மற்றும் தனன்ஜய லக்ஷான் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அதுமாத்திரமின்றி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள திசர பெரேரா மற்றும் இசுரு உதான ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐ.பிஎ.ல். வீரர்கள் ஏலமானது இம்மாதம் 12 மற்றும் 13ம் திகதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். ஏலத்தில் இடம்பெறவுள்ள இலங்கை வீரர்கள்

  1. வனிந்து ஹஸரங்க
  2. துஷ்மந்த சமீர
  3. மஹீஷ் தீக்ஷன
  4. சரித் அசலங்க
  5. நிரோஷன் டிக்வெல்ல
  6. குசல் மெண்டிஸ்
  7. குசல் பெரேரா
  8. அகில தனன்ஜய
  9. பானுக ராஜபக்ஷ
  10. மதீஷ பதிரண
  11. அவிஷ்க பெர்னாண்டோ
  12. பெதும் நிஸ்ஸங்க
  13. சாமிக்க கருணாரத்ன
  14. தசுன் ஷானக
  15. கெவின் கொத்திகொட
  16. திசர பெரேரா
  17. லஹிரு குமார
  18. இசுரு உதான
  19. நுவான் துஷார
  20. தனுஷ்க குணதிலக்க
  21. தனன்ஜய லக்ஷான்
  22. சீகுகே பிரசன்ன
  23. துனித் வெல்லாலகே

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<