பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் அரையிறுதிப் போட்டிகள் திடீர் ரத்து: PCB அதிரடி

64
ESPN

கொவிட்-19 எனப்படுகின்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இன்று (17) நடைபெறவிருந்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் (PSL) அரையிறுதி போட்டிகள் மற்றும் நாளை (18) நடைபெறவிருந்த இறுதிப் போட்டி என்பவற்றை ரத்து செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து வகை விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும், பாகிஸ்தானில் பாகிஸ்தான் சுப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் மாத்திரம் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வந்தது

இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் இரத்து

கொரோனா வைரஸ் பீதியானது……………………

முன்னதாக, குறித்த தொடரை விரைவாக முடிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்ததுடன், போட்டி அட்டவணை திருத்தப்பட்டு விளையாடும் நாட்களின் எண்ணிக்கையை 4 ஆகவும், போட்டிகளின் எண்ணிக்கையை 34 முதல் 33 ஆகவும் குறைக்கப்பட்டது. 

அத்துடன், மீதமுள்ள போட்டிகளை மாற்றியமைத்து, பிளே ஓப் ஆட்டங்களை இரண்டு அரையிறுதிக்கு மாற்றியது

திருத்தப்பட்ட அட்டவணையின்படி, இரண்டு அரையிறுதிகளும் மார்ச் 17ஆம் திகதியும், இறுதிப் போட்டி மார்ச் 18ஆம் திகதியும் லாகூரின் கடாபி மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுஇவ்வாறிருக்க, கொரோனா அச்சம் காரணமாக பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இருந்து பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 14 வெளிநாட்டு வீரர்களை வெளியேறவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பணித்திருந்தது

இதில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், கார்லோஸ் பிராத்வைட், லியாம் டாசன், ஜேசன் ரோய் மற்றும் டைமல் மில்ஸ், கொலின் முன்ரோ, டேல் ஸ்டெய்ன், டேவிட் மாலன் உள்ளிட்ட வீரர்கள் அடங்கும்.

இதற்கிடையே வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் சொந்த நாடுகள் திரும்ப ஆரம்பித்தனர். லீக் சுற்றின் கடைசி இரண்டு போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன.  

இதில் சில வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் அவர்களும் வெளியேற ஆரம்பித்தனர். இந்த இரண்டு போட்டிகளும் மூடிய மைதானத்திற்குள் நடைபெற்றதன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து நொக்அவுட் சுற்று போட்டிகளை ரத்து செய்வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இன்று (17) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இதன்படி, இன்று நடைபெறவிருந்த முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் ஷல்மி அணிகளுக்கிடையிலான முதலாவது அரையிறுதி ஆட்டமும், கராச்சி கிங்ஸ் மற்றும் லாகூர் கிளெண்டர்ஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரையிறுதி ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது

கொரோனா வைரஸினால் இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு

கெரோனா வைரஸ் தொற்று…………………

இதன்படி, குறித்த போட்டிகள் எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி வசீம் கான் தெரிவித்தார்.  

இதுஇவ்வாறிருக்க, ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியை ஒத்திவைப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி எதிர்வரும் 29ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்க அந்நாட்டுக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தது.  

கொரோனா காரணமாக MCC கிரிக்கெட் போட்டியும் இரத்து

கடந்த பருவகாலத்தில், இங்கிலாந்து……………….

அதேபோல, ஏப்ரல் 5ஆம் திகதி இரு அணிகளும் பங்கேற்கும் .சி.சியின் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற இருந்தது.   

ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தொடரை காலவரையின்றி ஒத்திவைக்க இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் முடிவு எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<