கொரோனா அச்சம் : தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் ரொஷான் மஹாநாம

80
PHOTO - ICC

பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பியிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான ரொஷான் மஹாநாம கொரோனா வைரஸிற்காக தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்வதாக குறிப்பிட்டிருக்கின்றார். 

பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் அரையிறுதிப் போட்டிகள் திடீர் ரத்து: PCB அதிரடி

கொவிட்-19 எனப்படுகின்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்….

உலகம் முழுவதையும் பீதிக்கு உள்ளாக்கியிருக்கின்றது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் காரணமாக உள்ளூர், சர்வதேசம் என அனைத்து இடங்களிலும் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு பாகிஸ்தானில் நடைபெற்று வந்த PSL T20 கிரிக்கெட் தொடரும் விதிவிலக்கு அல்ல. இந்த தொடரில், போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றிய ரொஷான் மஹாநாமவே தற்போது தனது தாயகமான இலங்கை திரும்பி, பாதுகாப்பின் பொருட்டு 14 நாட்களுக்கு தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

கடந்த 1996ஆம் ஆண்டு, கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்ற ரொஷான் மஹாநாம தனிமைப்படுத்திக் கொள்வதோடு மாத்திரமின்றி, இன்னும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், பொது மக்களையும் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு தனது பேஸ்புக் கணக்கு மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

Security Check Required

(null)

கொரோனா வைரஸானது, இலங்கையினையும் ஆட்கொண்டுள்ள நிலையில், இதுவரை 40 இற்கு மேற்பட்டோர் நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்நாட்டுக்கு வரும் அனைவரும் 14 நாட்கள் கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு நோய்த்தொற்று தொடர்பாக பரிசோதனைகளுக்கு முகம் கொடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதுதவிர, பொது மக்களுக்கும் இலங்கையின் சுகாதாரத்துறை இந்த வைரஸிலிருந்து தங்களை காத்துக் கொள்ள விஷேட அறிவுரைகளை வழங்கியிருக்கின்றது. 

அதேநேரம், கொரோனா பீதியினால் கைவிடப்பட்ட PSL T20 கிரிக்கெட் தொடரில் குழுநிலைப் போட்டிகள் யாவும் நிறைவடைந்திருந்ததோடு, தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் லாஹுரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், கோரோனா அச்சத்தினால் குறித்த போட்டிகள் அனைத்தும் திடீரென்று ரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<