கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழாம் அறிவிப்பு

Lanka Premier League 2023

235

எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் களமிறங்கவுள்ள கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளர் சைமன் ஹெல்மட் தலைமைப் பயிற்சியாளராகவும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் இடைக்காலப் பயிற்சியாளரும், முகாமையாளருமான ஜெரோம் ஜயரத்ன உதவிப் பயிற்சியாளராகவும், இலங்கையின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இணைந்து கொண்டது தொடர்பில் சைமன் ஹெல்மட் கருத்து தெரிவிக்கையில்,

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் இணைந்து பணியாற்ற நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். லங்கா பிரீமியர் லீக்கில் பயிற்சியாளராக இருப்பது இதுவே முதல்முறை என்பதால், இந்த தொடர் ஆரம்பமாகும் வரை ஆவலுடன் உள்ளேன். அணியில் ஏற்கனவே சில முன்னணி வீரர்கள் உள்ளனர், மேலும் சில வீரர்களை ஏலத்தில் ஒப்பந்தம் செய்து வலுவான அணியொன்றை உருவாக்குவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் என தெரிவித்தார்.

இந்த நிலையில், கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளர் சமிந்த வாஸ் கருத்து தெரிவிக்கையில்,

எனது சொந்த ஊர் கொழும்புக்கு மிக அருகில் உள்ளது. அதனால் என் இதயம் அந்த நகரத்திற்கு மிகவும் நெருக்கமாகவே உள்ளது. எனவே, கொழும்பு அணியின் வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கிறது. லங்கா பிரீமியர் லீக் இளம் வீரர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும், மேலும் திறமையான இளம் வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் உற்சாகமாக இருக்கும் என்றார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்களின் முன்னாள் பிரதானியாக பணியாற்றிய ஜெரோம் ஜயரத்ன மேலும் தெரிவிக்கையில்,

புதிய அணியில் இணைவது எப்போதும் உற்சாகமாக இருக்கிறது. இலங்கை அணியின் இளம் வீரர்களான சாமிக கருணாரத்ன மற்றும் மதீஷ பத்திரன ஆகிய இருவரும் எமது அணியில் உள்ளனர். மேலும் வீரர்கள் ஏலத்தில் சிறந்த உள்ளூர் வீரர்களை வாங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். மேலும் ஏலத்திற்குப் பிறகு எங்களுடன் இணையும் வீரர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என குறிப்பிட்டார்.

கொழும்பு மற்றும் நியூயோர்க் ஆகிய நகரங்களை தளமாகக் கொண்டு இயங்குகின்ற வியாபார நிறுவனங்களில் ஒன்றான ளுமுமுலு குழுமத்தின் உரிமையாளர் சாகர் கன்னா, தமது அணியின் பயிற்சியாளர்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில்,

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு சிறந்த பயிற்சியாளர்களை நியமிக்க விரும்பினோம், தற்;போது எங்களிடம் சைமன் ஹெல்மட், சமிந்த வாஸ் மற்றும் ஜெரொம் ஜயரத்ன ஆகியோர் பயிற்சியாளர்களாக உள்ளனர். கிரிக்கெட் களத்தில் அனுபவம் வாய்ந்த மற்றும் முன்னணி பயிற்சியாளர்கள் இருப்பதால், அவர்கள் அணியை சரியான திசையில் வழிநடத்துவார்கள் என தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் பயிற்சியாளராக அசாருதீன் குரேஷி செயல்படவுள்ளதுடன

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<