சித்திரரைப் புத்தாண்டு மரதன், சைக்கிளோட்டப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

172

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும், கிராமிய பாடசாலைகள் உகட்டமைப்பு வசதிகள் இராஜங்க அமைச்சும் இணைந்து நாடளாவிய ரீதியில் முதல்தடவையாக ஏற்பாடு செய்துள்ள சித்திரைப் புத்தாண்டு மரதன் ஓட்டம் மற்றும் சைக்கிளோட்டப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. 

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை வேலைத்திட்டத்தின் கீழ் நாடுபூராகவும் உள்ள திறமையான வீர, வீராங்கனைகளை இனங்கண்டு அவர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றிபெறச் செய்வதை இலக்காகக் கொண்டு இந்தப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன

இதன்படி, நாட்டில் விளையாட்டுக் கலாசாரமொன்றை ஏற்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணகருவுக்கு அமைய கிராமிய பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜங்க அமைச்சர் தேனுக விதானகமகேவின் வழிகாட்டலுடன் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர் காரியங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சித்திரைப் புத்தாண்டு சைக்கிளோட்டம் (ஸ்டேன்டர்ட்) மற்றும் அரை மரதன் ஓட்டப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

தேசிய விளையாட்டு விழா மரதன், வேகநடை, சைக்கிளோட்டப் போட்டிகள் கதிர்காமத்தில்

நாடு பூராகவும் 100 போட்டிகளைக் கொண்டதாக நடைபெறவுள்ள குறித்த இரண்டு போட்டிகளும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் முதலிடத்துக்கு 50 ஆயிரம் ரூபாவும், இரண்டாவது இடத்துக்கு 25 ஆயிரம் ரூபாவும், மூன்றாமிடத்துக்கு 10 ஆயிரம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்படவுள்ளது.

இதனிடையே, இந்தப் போட்டிகளில் பங்குபற்ற விரும்புகின்ற போட்டியாளர்கள் தமது விண்ணப்பங்களை ஏப்ரல் 9ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலாளர் காரியலங்களில் உள்ள விளையாட்டு அதிகாரியிடம் கையளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுன்னது.

Download application form

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க…