சத்தமில்லாமல் உலக சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்

309
Image Courtesy - Getty

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் முதலிடதைப் பெற்று புதிய சாதனை படைத்தார்.  

பாகிஸ்தானுடன் ஆக்ரோஷம் வெற்றிக்கு வழிவகுத்தது – ஹோல்டர்

நவீன கால கிரிக்கெட்டில் ஆக்ரோஷமாக…

அத்துடன், மேற்கிந்திய தீவுகள் அணியுடன் பெற்றுக்கொண்ட இந்தத் தோல்வியுடன் பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் ஒருசில மோசமான பதிவுகளையும் நிகழ்த்தியிருந்தது.

12ஆவது உலகக் கிண்ணத் தெடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகின்றது. நொட்டிங்ஹம்மில் நேற்று (31) நடைபெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகளால் மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தியிருந்தது.

இந்தப் போட்டியில் துடுப்பாட்டத்தில் அசத்திய கிறிஸ் கெய்ல் அரைச் சதமடித்தார். இதில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இதன்மூலம் உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்சை முந்தி முதலிடத்தைப் பிடித்தார். இதுவரை 27 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ள 39 வயதான கிறிஸ் கெய்ல் 40 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தைப் பெற்று புதிய வரலாறு படைத்தார்.

இந்தப் பட்டியலில் தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் 37 சிக்ஸர்களுடன் இரண்டவாது இடத்தையும், அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் 31 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தோற்றோம் – சர்பராஸ்

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான…

நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் (29), தென்னாபிரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ் (28), இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (27), இலங்கையின் சனத் ஜெயசூரிய (27) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.

எனினும், ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை மொத்தம் 351 சிக்ஸர்களுடன், அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில், பாகிஸ்தான் வீரர் சஹீட் அப்ரிடி முதலிடத்திலும், கிறிஸ் கெய்ல் 314 சிக்ஸர்களுடன் 2ஆவது இடத்திலும் உள்ளனர்.

6 அரைச் சதங்கள்

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சை அடித்து நொருக்கிய கிறிஸ் கெய்ல் 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன்படி, தொடர்ச்சியாக ஆறு ஒருநாள் போட்டிகளில் 50 அல்லது அதற்கு மேல் ஓட்டங்களைக் குவித்த (73, 135, 50, 162, 77, 50) வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இந்தப் பட்டியலில் மேற்கிந்திய தீவுகளின் கிரீனிட்ச் (1979-80), நியூசிலாந்தின் அன்ட்ரூ ஜோன்ஸ் (1988.-89), பாகிஸ்தானின் மொஹமட் யூசுப் (2003), அவுஸ்திரேலியாவின் மார்க் வோஹ் (1999), நியூசிலாந்து வீரர்களான கேன் வில்லியம்சன் (2015) மற்றும் ரொஸ் டெய்லர் (2018) ஆகியோர் இரண்டாவது இடத்தை சமமாகப் பகிர்ந்து கொண்டுள்ளனர். எனினும், பாகிஸ்தானின் மியன்டாட், 9 போட்டிகளில் 50 அல்லது அதற்கு மேல் ஓட்டங்களைக் குவித்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

உலகக் கிண்ண முதல் போட்டியில் சில அரிய சாதனை அடைவுகள்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின்…

120 பிடியெடுப்பு

பாகிஸ்தான் துடுப்பெடுத்தாடிய போது இமாத் வசீம் தூக்கியடித்த பந்தை கிறிஸ் கெய்ல் அபாரமாக பிடியெடுத்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் மேற்கிந்திய தீவுகள் சார்பாக அதிக பிடியெடுப்பு எடுத்த வீரர்கள் வரிசையில் கார்ல் கூப்பருடன் (120 பிடியெடுப்பு) கெய்ல் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.  

11 தோல்விகள்

மேற்கிந்திய தீவுகளுடனான தோல்வியை அடுத்து ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 11ஆவது தோல்வியை பதிவு செய்தது. அந்த அணி கடைசியாக விளையாடிய 12 போட்டிகளில் ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதில் இங்கிலாந்து அணியுடன் 4 போட்டிகளிலும், அவுஸ்திரேலியா அணியுடன் 5 போட்டிகளிலும், தென்னாபிரிக்கா அணியுடன் ஒரு போட்டியிலும் அந்த அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் தோல்வியைப் பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் 1988 மார்ச் வரையான காலப்பகுதியில் பாகிஸ்தான் அணி 10 போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2ஆவது குறைந்த ஓட்டம்

உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் எடுத்த 2ஆவது மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை (105) இதுவாகும். முன்னதாக, 1992 உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 74 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அக்தர், ரொஹைலின் அதிரடியால் இலங்கையை வீழ்த்திய பாக். இளையோர்

அக்தர் ஷாவின் மிரட்டல் பந்துவீச்சு மற்றும்…

நான்கு பிடியெடுப்புகள்

மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் காப்பாளர் ஷாய் ஹோப், இந்தப் போட்டியில் 4 பிடியெடுப்புகளை செய்தார். இதன்மூலம் உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக பிடியெடுப்புகள் செய்த விக்கெட் காப்பாளர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டார். இதில் முதலிடத்தை அவுஸ்திரேலியாவின் அடெம் கில்கிறிஸ்ட் மற்றும் பாகிஸ்தானின் சர்பராஸ் அஹமட் (6 பிடியெடுப்பு) ஆகிய இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மூன்றாவது முறை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 3ஆவது முறையாக 25 ஓவர்களுக்கு குறைவான ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. முன்னதாக 1992ஆம் ஆண்டு இவ்வாறு பாகிஸ்தான் அணி குறைந்த ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்திருந்தது.

அதிக பந்துகள் மீதமிருக்க பெற்ற தோல்வி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 218 பந்துகள் மீதமிருக்க பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. இதன்மூலம் உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் அதிக பந்துகள் மீதமிருக்க தனது மோசமான தோல்வியை அந்த அணி பதிவு செய்தது. இதற்குமுன் 1999இல் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 179 பந்துகள் மீதமிருக்க பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியிருந்தது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<