இலங்கை அணியில் இணையும் புதுமுக சுழல் பந்துவீச்சாளர்

India tour of Sri Lanka 2021

2575
Suminda Lakshan

இந்திய அணிக்கு எதிரான  மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான இலங்கை குழாத்தில் புதுமுக சுழல் பந்துவீச்சாளர் சுமிந்த லக்ஷான் இணைக்கப்பட்டுள்ளார்.

வனிந்து ஹசரங்க இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் T20I தொடரில் விளையாடுவாரா? இல்லையா என்பது தொடர்பில் நிச்சயமற்றத்தன்மை நிலவுவதால், சுமிந்த லக்ஷான் இணைக்கப்பட்டுள்ளார்.

>> “இந்த இளம் அணியால் போட்டிகளில் வெற்றிபெறமுடியும்” தசுன் ஷானக

தம்புள்ளையில் பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் இலங்கை A குழாத்துக்கான பயிற்சிப் போட்டிகளில் மிகச்சிறப்பாக பிரகாசித்து வருவதன் காரணமாக சுமிந்த லக்ஷான் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுமிந்த லக்ஷான் தன்னுடைய முதற்தர கிரிக்கெட்டை இலங்கை விமானப்படை அணிக்காக ஆரம்பித்தாலும், தற்போது இலங்கை இராணுப்படை அணிக்காக விளையாடி வருகின்றார். இவர் 11 T20 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் வீழ்த்தியிருந்தாலும், 22 லிஸ்ட் ஏ போட்டிகளில் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதேநேரம், கடந்த வருடம் நடைபெற்ற ஆர்மி கமாண்டர்ஸ் லீக்கில் சௌதெர்ன் வொரியர்ஸ் அணிக்காக விளையாடியதுடன், குறித்த அணியில் தினேஷ் சந்திமால், துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் விளையாடியிருந்தனர். இந்த தொடரில் சௌர்தன் வொரியர்ஸ் அணி வெற்றிபெற்றிருந்தது. 

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று T20I போட்டிகள் எதிர்வரும் 25, 27 மற்றும் 29ம் திகதிகளில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<